"சுப்ரீம் பவர்".. வரலாற்றை புரட்டி காட்டி எடப்பாடிக்கு ஓபிஎஸ் வைத்த செக்! கோர்ட்டில் நடந்த திருப்பம்
Are these the points said by O Panneerselvam against Edappadi Palanisamy in AIADMK case? அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தர்பொது தனது தரப்பு வாதத்தை வைத்து வருகிறார். அதிமுகவில் யாருக்கு அதிக அதிகாரம் என்பது
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தர்பொது தனது தரப்பு வாதத்தை வைத்து வருகிறார். அதிமுகவில் யாருக்கு அதிக அதிகாரம் என்பது தொடர்பான வாதங்களை அவர் வைக்கிறார்.
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது செல்லாது என்று கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்றி இரண்டு நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இன்றே இறுதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று இரண்டரை மணி நேரம் வாதம் வைத்தது. தற்போது ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம் வைத்து வருகிறது.

என்ன வாதம்
இந்த வழக்கில் இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதத்தில்.. அதிமுகவில் பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவிற்கு கட்டுப்பட்டுதான் அடிப்படை உறுப்பினர்கள் செயல்பட முடியும். ஆனால் தனி நீதிபதியோ அடிப்படை உறுப்பினர்களை கேட்டு முடிவுகளை எடுக்கவில்லை என்று கூறி உள்ளார்.கட்சி விதிகளின்படி பொதுக்குழு மட்டுமே முடிவுகளை எடுக்க முடியும். எனவே நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்கள் முடிவு எடுக்க முடியாது.

அதிகாரமே இல்லை
அவர்களுக்கான அதிகாரம் எதுவும் இல்லை., என்று வாதம் வைத்தார். எடப்பாடி வைக்கும் முக்கியமான வாதம் என்று பார்த்தால் பொதுக்குழு உறுப்பினர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. அவர்கள் சொல்வதைதான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் கேட்க வேண்டும். மாறாக அடிப்படை உறுப்பினர்கள் சொல்வதை பொதுக்குழு கேட்க வேண்டியது இல்லை. பொதுக்குழு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் ஆதரவாக இருக்கிறது என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்துள்ளது.

ஓ பன்னீர்செல்வம்
இதற்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைத்த பதில் வாதத்தில்அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போதே தொண்டர்களுக்குத்தான் அதிக பவர் கொடுத்தார். தொண்டர்கள் தலைவர்களை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுகதான். அதற்குத்தான் தேர்தல் வைக்கிறோம். தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்தான் எம்ஜிஆர். எம்ஜிஆர் கட்சி தொடங்கியது அதை மையப்படுத்திதான். அதன்பின் ஜெயலலிதா இதை பின்பற்றினார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா தொண்டர்கள் மூலம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளரும் போட்டியின்றி தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அதனால் கட்சியில் தொண்டர்களுக்கே சுப்ரீம் பவர் இருக்கிறது. அவர்களுக்கே முடிவு எடுக்கும் சுப்ரீம் அதிகாரம் இருக்கிறது. பொதுக்குழுவிற்கு இல்லை, என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தனது வாதத்தில் வைத்துள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications