"கழண்டு" விழுந்த கட்சி.. திடீர்னு 'கோபாலபுரத்துக்கு' பறந்த போன்.. எல்லாத்துக்கும் காரணம் எடப்பாடியா?
சென்னை: திமுக தரப்புக்கு போன் செய்து பேசியிருக்கிறார் தேமுதிகவின் பிரேமலதா.. இதற்கான காரணம் தற்போது பிரத்யேகமாக நமக்கு கிடைத்துள்ளது.
தேமுதிகவை பொறுத்தவரை, இதுவரை பாஜகவை வெளிப்படையாக விமர்சித்தது இல்லை.. பெரிதாக கண்டித்ததும் இல்லை.. தேமுதிக மீது பாஜக மேலிடத்துக்கு ஒருவித சாப்ட் கார்னர் இருந்து வருவதாகவே கூறப்படுகிறது..
அதிலும் விஜயகாந்த் என்றால், பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ரொம்ப பிடிக்குமாம்.. எனினும், கடந்த முறை, கூட்டணி விஷயத்தில், பாஜக மேலிடம் தேமுதிகவை கைவிட்டு விட்டதாகவே சொன்னார்கள்..

விஜயகாந்த்: அந்த சமயத்தில் தமிழக பாஜகவிடமே எடப்பாடி பழனிசாமி, கெடுபிடி காட்டியபடி இருந்ததால், தங்களுக்கு தேவையான சீட்டுக்களைகூட பாஜகவால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியவில்லை.. அமமுகவை கூட்டணிக்குள் சேர்த்து கொள்ள வேண்டும் என்று சொன்னதுபோலவே, தேமுதிகவையும் இணைத்து கொள்ள பாஜக சொன்னதாம்.. ஆனால், அதிமுக மேலிடம் அதை கேட்காமல், தேமுதிகவை கடைசி நேரத்தில் கழட்டிவிட்டதாக செய்திகள் கசிந்தன. இதற்கு பிறகுதான், அமமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கவும் நேர்ந்தது..
பழைய கதை: இதெல்லாம் பழைய கதை என்றாலும், பாஜகவுடன் தொடர்ந்து தேமுதிக பற்றுடனேயே இருக்கிறது.. அதனால்தான் நம்முடையசெங்கோல் பாராளுமன்றத்தில் அமைவது ஒட்டு மொத்த தமிழருக்கு கிடைத்த பெருமை" என்று புகழாரம் சூட்டினார். மற்றொருபக்கம் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இப்படிப்பட்ட சூழலில்தான், சமீபத்தில் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்துள்ளது.. இந்த கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தேமுதிக அழைக்கப்படவில்லை. இதனால் ரொம்பவுமே நொந்து போயிருந்திருக்கிறார். பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ், கூட்டத்துக்கு அழைக்காதது குறித்து தமிழக பாஜக தலைவர்கள் சிலரின் மூலமாக டெல்லியை அணுகினாராம்..
அழைப்பு: அப்போது, தமிழகத்திலிருந்து எந்த கட்சிகளை அழைப்பது என எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டோம். அவர் தேமுதிக பெயரை சொல்லவில்லையே என்று பதில் தரப்பட்டதாம். உடனே இந்த விஷயத்தை பிரேமலதாவிடம் சுதீஷ் சொல்லியிருக்கிறார்.. இதைக்கேட்டதுமே, பிரேமலதா கடும் கோபத்துக்கு சென்றுவிட்டாராம்.
ஆக, பாஜக நினைத்தாலும் கூட்டணிக்குள் நாம் இருக்க முடியாது. எடப்பாடி நினைச்சாத்தான் முடியும்? அப்படின்னா, எடப்பாடி நம்மை சேர்த்துக்க மாட்டார். நாம் இனிமேல் மாற்றி யோசிக்க வேண்டும். நம்மளுடைய அரசியலை நாம் காட்ட வேண்டும் என கர்ஜித்திருக்கிறார்.
அதற்கு சுதீஷ், "இதில் ஏதோ தப்பு நடந்திருக்கு. கூட்டணிக்குள் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக்கூடாது என்பதை முடிவு செய்வதை எடப்பாடியிடம் எல்லாம் பாஜக விட்டுவிடாது. உண்மையான காரணம் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு முடிவு எடுக்கலாம் என்று சொன்னாராம்.. அதன்பிறகுதான் கொஞ்சம் அமைதியானாராம் பிரேமலதா.
கூட்டணி : உடனே பக்கம் அவரது பார்வை திரும்பியிருக்கிறது.. திமுகவின் குடும்ப பெண் உறவுகளை தொடர்புகொண்டு நலம் விசாரித்திருக்கிறார்.. இதையடுத்து, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் கூட்டியுள்ளார் பிரேமலதா. இந்த கூட்டத்தில், பாஜக-அதிமுக கூட்டணியில் நமக்கு இடமில்லை என்றால், அடுத்து என்ன முடிவு எடுக்கலாம்? என்று கருத்து கேட்க போகிறாராம்.. எனவே, மாவட்ட செயலாளர்களின் யோசனைகளுக்கு பிறகே, கூட்டணி குறித்த ஒரு முடிவுக்கு தேமுதிக வரும் என்று தெரிகிறது.. பார்ப்போம்..!!!
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications