விஜயபிரபாகரன் நேரா "அங்கயே" போனை போட்டு.. "அவதாரம் ரெடி".. அந்த பக்கமா சாயுதே தேமுதிக.. அப்ப அதேதானா
சென்னை: தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் தமிழக அரசியல் களத்தில் சூழ்ந்து வருகிறது.
தேமுதிகவை பொறுத்தவரை, இதுவரை பாஜகவை வெளிப்படையாக விமர்சித்தது இல்லை.. பெரிதாக கண்டித்ததும் இல்லை.. தேமுதிக மீது பாஜக மேலிடத்துக்கு ஒருவித சாப்ட் கார்னர் இருந்து வருவதாகவே கூறப்படுகிறது..

அதிலும் விஜயகாந்த் என்றால், பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ரொம்ப பிடிக்குமாம்.. எனினும், கடந்த முறை, கூட்டணி விஷயத்தில், பாஜக மேலிடம் தேமுதிகவை கைவிட்டு விட்டதாகவே சொன்னார்கள்..
விஜயகாந்த்: அந்த சமயத்தில் தமிழக பாஜகவிடமே எடப்பாடி பழனிசாமி, கெடுபிடி காட்டியபடி இருந்தால், தங்களுக்கு தேவையான சீட்டுக்களைகூட பாஜகவால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியவில்லை.. அமமுகவை கூட்டணிக்குள் சேர்த்து கொள்ள வேண்டும் என்று சொன்னதுபோலவே, தேமுதிகவையும் இணைத்து கொள்ள பாஜக சொன்னதாம்.. ஆனால், அதிமுக மேலிடம் அதை கேட்காமல், தேமுதிகவை கமடசி நேரத்தில் கழட்டிவிட்டதாக செய்திகள் கசிந்தன. இதற்கு பிறகுதான், அமமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கவும் நேர்ந்தது..
பழைய கதை: இதெல்லாம் பழைய கதை என்றாலும், பாஜகவுடனான பற்று தேமுதிகவுக்கு எப்போதுமே இருக்கிறது என்று அப்பட்டமாகவே தெரிகிறது.. கடந்த வாரம் தூத்துக்குடியில் பிரேமலதா ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, "புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு வாழ்த்துக்கள். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாளாகும்.. நல்ல ஒரு விஷயம் நாட்டிற்காக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து செங்கோல் அங்கு அமைவது ஒட்டு மொத்த தமிழருக்கு கிடைத்த பெருமை" என்றார்.
அத்துடன் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.. "கனிமவள கொள்ளை அதிகமாக நடக்கிறது.. அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது. கேட்டால் எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி மாறி குறை சொல்கிறார்கள். இதை தட்டிக்கேட்ட ஒரு நியாயமான அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விஏஓ குடும்பத்தினருக்கு முதல்வர் ரூ.1 கோடி அறிவித்துள்ளார். போன உயிர் வந்துவிடுமா? பள்ளிக்கூட கட்டிடம் பாதுகாப்பு கிடையாது.. ஆனால் டாஸ்மாக் கடை ஒரு தெருவுக்கு 10 திறக்கப்பட்டுள்ளது" என்று கடும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.
மேகதாது அணை: நேற்றுகூட மதுரையில் செய்தியாளர்களிடம் பிரேமலதா சொல்லும்போது, "கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என பாஜக ஆட்சியில் சொன்னார்கள்.. அதை காங்கிரஸ் கட்சி அதைப்பற்றியே இப்போது பேசுகிறார்கள். அணை கட்டுவதை தமிழகமும், தமிழர்களும் அனுமதிக்கமாட்டார்கள்... மேகதாது விவகாரம் 2 மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். அதனால், மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நிச்சயம் நியாயத்தை பெற்றுத்தர வேண்டும்... திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் வருமானவரி அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளார்கள். கடமையை செய்ய வந்த அதிகாரிகள் தங்களுக்கு தகவல் கொடுக்கவில்லை என போலீசார் சொல்வது வேடிக்கையாக உள்ளது.. காவல்துறை இன்று ஏவல் துறையாக மாறிவிட்டது..
அதிகாரிகளை தாக்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியை தான் கைது செய்ய வேண்டும். அப்போதுதான் கடமையை செய்ய வரும் அதிகாரிகளை தடுப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்தது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த பெருமை ஆகும். அதில் எதுக்காக சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள்? என்று தெரியவில்லை" என்றார்.
களப்பணிகள்: இதுவரை தேமுதிக கூட்டணி முடிவாகவில்லை... யாருடன் கூட்டணி என்பது குறித்து உறுதியான தகவலும் வரவில்லை.. தொகுதிகளில் களப்பணிகள் வேகம் எடுத்துள்ளதாக தெரிகிறது.. அத்துடன் விஜயபிரபாகரன் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரடியாகவே சென்று, மாவட்ட தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.. இதுகுறித்து சில தேமுதிக மாவட்ட தலைவர்கள் சிலரிடம் நாம் தொடர்பு கொண்டு பேசினோம்.
அவர்கள் நம்டம் சொல்லும்போது, "கட்சிக்குள் தொய்வை சரிப்படுத்தும் வேலையில் விஜயபிரபாகரன் மும்முரமாகி இருக்கிறார்.. விஜய பிரபாகரனின் பக்குவமும், முதிர்ச்சி அரசியலும் கூடியுள்ளதும் கட்சிக்கு தெம்பை தந்து கொண்டிருக்கிறது.. "அடுத்த அவதாரம் ரெடி" என்ற என்பதாகவே நாங்கள் அவரை பார்க்கிறோம்.. ஆனால், கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.. விரைவில் மா.செ. கூட்டத்தை நடத்த போகிறோம்.. அப்போதுதான், கட்சி மேலிடம் இதுகுறித்த ஆலோசனையில் ஈடுபடுவார்கள்" என்றனர்.
யாருடன் கூட்டணி: எனினும், பாஜகவை இப்போதுவரை விட்டுக்கொடுக்காமலும், அதேசமயம், திமுகவை கடுமையாக தாக்கியும், தேமுதிக மேலிடத்தின் சமீபகால பேச்சுக்களும், பேட்டிகளும் அமைந்துவருவதால், அக்கட்சியின் கூட்டணி யாருடன் என்பது ஓரளவு கணிக்கப்பட்டும் வருகிறதாம்.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications