கமலாலய வாசலில் விழுந்த "டோஸ்".. ஸ்டாலின் மகன்னா? நீங்கெல்லாம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க? அதிரும் பாஜக
சென்னை: சென்னை வந்த பிரதமர், உதயநிதியின் தோளை தொட்டு ஏதோ சொல்ல, அதைக்கேட்டு உதயநிதி ஸ்டாலின், விழுந்து விழுந்து சிரிக்க.. ஏர்போர்ட்டில் இப்படி ஒரு நெருக்கத்தை பார்த்து, எதிர்க்கட்சிகளின் காதில் புகையே வந்துவிட்டது.. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், உதயநிதி மீது தமிழக பாஜக கடும் கோபத்தில் உள்ளதாம்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை சேப்பாக்கத்தில், ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில், பலரால் இந்த விளையாட்டை நேரில் காண செல்ல முடியவில்லை என்கிறார்கள்.
டிக்கெட் தட்டுப்பாடு, பிளாக் டிக்கெட் என்று ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக ஏமாற்றத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.. இந்த விவகாரம் 2 நாட்களுக்கு முன்பு, தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது..
ஐபிஎல் டிக்கெட்: அதிமுக மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணி இந்த விவகாரத்தை கிளப்பவும், அதற்கு அமைச்சர் உதயநிதி பதில் தந்திருந்தார்.. "4 ஆண்டுகளாக, ஐபிஎல் போட்டிகள், சென்னையில் நடக்கவில்லை.. இப்போதுதான் நடக்கிறது... நீங்கள் யாருக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தீர்கள்.. ஐபிஎல் யார் நடத்துகிறார்கள் என்றால் பிசிசிஐ. உங்களின் நெருங்கிய நண்பர் அமித் ஷா இருக்கிறார் அல்லவா? அவர் மகன் ஜெய்ஷா தான் தலைமை பொறுப்பு வகிக்கிறார். நாங்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள். நீங்கள் சொன்னால் கேட்பார்கள். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஐந்து டிக்கெட் வாங்கி கொடுத்தால் போதும். நாங்கள் காசு கொடுத்து கூட வாங்கி கொள்கிறோம். இல்லையெனில் வேறு ஏதாவது கணக்கில் சேர்த்து விடுவீர்கள்" என்றார்.

சிரிப்பொலி: உதயநிதி இப்படி பேசியதுமே பேரவையில் சிரிப்பொலியை எதிரொலிக்க செய்தனர்.. . செம பஞ்ச் கொடுத்தீங்க என பேரவை முடிந்ததும் உதயநிதியிடம் சக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் சொல்லி மகிழ்ந்தனர். தமிழக சட்டமன்றத்தில் அமித் ஷா பெயரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தியற்கு பாஜக கொந்தளித்தது.. மூத்த தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் இதுகுறித்து பேசியபோது "ஐபிஎல் போட்டி குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்...
அப்போது அவையில் எழுந்து விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சரின் பெயர் என்ன தகாத வார்த்தையா? எதற்காக அவைக் குறிப்பில் இருந்து நீக்க சொல்கிறீர்கள்? அமைச்சர் மரியாதை குறைவாக எதுவும் சொல்லவில்லையே.. அப்படி சொல்லியிருந்தால் நானே நீக்க சொல்லி விடுவேன்.. "திரு" என்று சொல்லி தான் அமைச்சர் பேசியுள்ளார். அதனால், நீக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.. இதனால் நயினார் நாகேந்திரனின் கோரிக்கை மறுக்கப்பட்டது.. பின்னர், பாஜக எம்எல்ஏக்கள் எல்லாருமே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆனாலும், உதயநிதியின் கமெண்ட் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தி விட்டது.

ஜெய்ஷா ஜெய்ஷா: குறிப்பாக, உதயநிதியின் சட்டப்பேரவை பேச்சு தேசிய அளவில் கவனம் பெற்றதாம். பாஜகவின் தேசிய தலைமை, "சபையில் உறுப்பினரல்லாதவர்களை பற்றி விமர்சனமோ குற்றச்சாட்டோ சொல்லக்கூடாதுங்கிறது மரபு. அந்த நாகரீகம் ஏன் திமுகவுக்கு இல்லை. முதல்வரின் மகன் என்றால் பேரவையில் எதுவும் பேசலாமே? என்று கேள்வி எதிரொலித்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய பாஜக எம்எல்ஏக்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? என தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவியிடம், கட்சி தலைவர் ஜேபி நட்டா கேட்டுள்ளாராம்.
இதனையடுத்து தமிழக பாஜகவுக்கு உத்தரவு வந்திருக்கிறது. இதன் பிறகு, அமித்ஷா, ஜெய்ஷா பெயரை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என இன்று பேரவையில் பிரச்சனை எழுப்பியிருக்கிறது பாஜக... இது ஏற்கப்படாததால், வெளிநடப்பு செய்தது பாஜக என்கிறார்கள் கமலாலய தரப்பில்.. ஏற்கனவே, உதயநிதி ஸ்டாலினின் செங்கல் விவகாரம், டெல்லி வரை கடுப்பாக்கியுள்ளது.. அதனால்தான், ஒவ்வொருமுறை பிரச்சாரத்தின்போது மேலிட தலைவர்கள் தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்கு வரும்போதெல்லாம், உதயநிநியையும் சேர்த்தே விமர்சித்து வருகின்றனர்.. இப்போது இந்த விவகாரமும் சேர்ந்துகொண்டுள்ளதால், பாஜக தலைவர்களை மேலும் எரிச்சலூட்டி வருகிறதாம்..!!
இன்றைய தினம் வெளிநடப்புக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பாஜக சட்ட மன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், "அமித்ஷா மற்றும் அவரின் மகன் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலியாக பேசினார்.. கிரிக்கெட் விளையாட்டிற்கான தமிழ்நாடு தலைவராக அசோக் சிகாமணி இருக்கிறார். அவர் பெயரை உதயநிதி ஏன் கூறவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.. தொடர்ந்து , பாஜக எம்எல்ஏ. வானதி சீனிவாசன் அளித்த பேட்டியில், கோவை குடிநீர் பிரச்னை குறித்த அவரின் கவன ஈர்ப்பை பேரவையில் அனுமதிக்கவில்லை.. அமைச்சர் உதயநிதி, அமித்ஷாவை பற்றி சட்டப்பேரவையில் பேசியதுபோல், இவர்களை குறித்து மற்ற மாநில சட்டமன்றத்தில் பேசினால் ஏற்றுக் கொள்வார்களா..? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications