Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விலாங்கு மீன்".. எடப்பாடியின் "பரமபத"த்தில் சறுக்கும் பாஜக.. கிலியில் "மண்குதிரை".. அப்படின்னா திமுக

திமுகவுக்கு எதிரான கூட்டணியை கட்டமைக்க அதிமுக - பாஜக கூட்டணி என்ன செய்ய போகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்தடுத்த பரபரப்புகள் புதிது புதிதாக முளைத்து வரும்நிலையில், அடுத்தக்கட்டமாக என்ன செய்ய போகிறது தமிழக பாஜக? திமுகவுக்கு எதிரான கூட்டணியை அமைக்க எந்தவிதமான முன்னெடுப்புகளை கையில் எடுக்க போகிறது? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக மூழ்கி கிடந்த நேரத்தில்தான், தமிழக பாஜக, நேரம் பார்த்து தன்னுடைய அரசியலை கையில் எடுத்தது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் நிலையிலும்கூட, திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்றுகூறி எதிர்அரசியலை தமிழகமெங்கும் கொண்டு சென்றார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..

வைகைச்செல்வன்

வைகைச்செல்வன்

அதிமுகவுக்கு இது அதிர்ச்சியையும் எரிச்சலையும் அப்போது தந்திருந்த நிலையில்தான், மூத்த தலைவர் வைகைச்செல்வன் தன்னுடைய பேட்டியில் ஒருமுறை பதிலடி தந்திருந்தார்.. "தமிழக அரசியல் களம் என்றாலே திமுகவுக்கு போட்டி அதிமுகதான்.. 7 முறை ஆட்சியை பிடித்தவர்கள்.. 50 ஆண்டுகால பொன்விழாவை கொண்டாடுகிறோம்.. அதனால் வேறு எந்த கட்சியும் இதில் சொந்தம் கொண்டாட முடியாது. அண்ணாமலை அப்படி சொன்னாலும், அவர்களுக்கு பலம் இருக்கிறதா, இல்லையா என்பதை இன்னொரு தேர்தலில்தான் பார்க்க முடியும்... அண்ணாமலையின் பேச்சு முதிர்ச்சியற்றது" என்றார் வைகை செல்வன்.. எனினும், இதற்கு பிறகும் திமுகவை டேமேஜ் செய்வதிலும், திமுகவுக்கு எதிரான அரசியலை கட்டமைப்பதிலும் பாஜகவின் மும்முரம் கூடிக்கொண்டே வந்தது..

ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

அதேசமயம், மாநில தலைமை மீதும் அக்கட்சிக்குள் அதிருப்திகள் வெடித்து கிளம்பியதாக செய்திகள் வலம்வர துவங்கின.. சில மாதங்களுக்கு முன்பு, ஒற்றை தலைமை விவகாரம் சமசரம் குறித்து பேச, 2 மூத்த தலைவர்கள் டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சேலத்துக்கு வந்திருந்தார்களாம்.. அப்போது எடப்பாடி, "தமிழகத்தில் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள்.. மூத்த தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்றோரை தலைவராக போடுங்கள். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் குறித்து பேசக்கூடாது... அப்படி செய்தால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அப்போது நிபந்தனை விதித்துள்ளதாக செய்திகள் கசிந்தன.

குட்புக் ஆசீர்வாதம்

குட்புக் ஆசீர்வாதம்

ஏற்கனவே தமிழக பாஜகவுக்குள்ளேயே இதே கோரிக்கைதான் மேலிடத்துக்கு முன்வைக்கப்பட்டு வருகிறதாம்.. ஆனாலும், பலனில்லை என்கிறார்கள்.. காரணம், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நேரடி நம்பிக்கையை பெற்றவர் அண்ணாமலை.. குறிப்பாக அமித்ஷாவின் 100 சதவீத நம்பிக்கையை பெற்றவர் அண்ணாமலை.. மேலிடத்தின் ஆசீர்வாதம் பெற்றவர்.. மதுரை டூ திண்டுக்கல்லில் பிரதமருடன் காரில் ஒரு மணி நேரம் பயணித்தவர்.. யாருக்கும் சுலபத்தில் கிடைக்காத உச்சபட்ச கவுரம் இது.. அதனால்தான், இப்போதுவரை அவர்களது குட்புக்கில் இடம்பெற்று வருகிறார்.. அப்படி ஒரு பெருமிதம் அண்ணாமலைக்கு கிடைத்துள்ள நிலையில், அவரை மாற்றும்படி முன்வைக்கக்கூடிய கோரிக்கைகள் எடுபடுமா? என்பது சந்தேகம் என்றார்கள் அரசியல் விமர்சகர்கள்..

பூவை மூர்த்தி

பூவை மூர்த்தி

இப்படிப்பட்ட சூழலில்தான் இடைத்தேர்தல் விவகாரம் சூடுபிடித்தது. இந்த இடைத்தேர்தலில், பாஜகவும் களத்தில் இறங்க வேண்டும் என்று அண்ணாமலையிடம், தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தினார்களாம்.. காரணம், தேர்தலில் போட்டியிடாமல் போனாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது எடப்பாடி பழனிசாமிக்கே சாதகமாக முடியும் என்று பாஜகவில் உள்ள சில சீனியர்கள் கருதினார்களாம்.. எனினும், எடப்பாடிக்கு சாதகமாகவே அண்ணாமலை நடந்து கொள்வதாக கூறி அதிருப்தி அடைந்த சில சீனியர்கள், டெல்லி வரை புகாரை கொண்டு சென்றுள்ளனர்..

ஜான்பாண்டியன்

ஜான்பாண்டியன்

அதுமட்டுமல்ல, தமிழக பாஜக நினைத்திருந்தால், டிடிவி + ஓபிஎஸ் + வாசன் + பாரிவேந்தர் + கிருஷ்ணசாமி + ஏசி சண்முகம், + ஜான்பாண்டியன், பூவைமூர்த்தி, சசிகலா இப்படி பலரையும் இணைத்து என்றோ இடைத்தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும்.. இத்தனை பேர் தங்களுக்கு ஆதரவாக இருந்தும்கூட, போட்டியிடாமல் அண்ணாமலை ஒதுங்க காரணம், எடப்பாடி மீது, மாநில தலைமைக்கு இருக்கும் "பாசம்"தான் என்றும் இன்னொரு புகார் டெல்லி வரை பறந்ததாம்.. இதற்கு நடுவில், ஓபிஎஸ்ஸும் அண்ணாமலை மீதான அதிருப்தியை டெல்லிவரை கொண்டு சென்றாராம்.. இப்படி வரிசையாக புகார்கள் கொண்டு செல்லப்பட்டும்கூட, எந்த புகாரையுமே மேலிடம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றே சொல்லப்பட்டது.

மாறுபாடுகள்

மாறுபாடுகள்

இப்போது விஷயம் என்னவென்றால், இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழக பாஜகவில் சில சீனியர்கள், மீண்டும் டெல்லி மேலிடத்துக்கு புகாரை கொண்டு சென்றுள்ளார்களாம்.. குறிப்பாக, "அதிமுக விவகாரத்தில், கட்சியை ஒருங்கிணைப்போம் என்கிறார் அண்ணாமலை.. பிறகு இன்னொரு கட்சி விஷயத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றும் சொல்கிறார்.. இப்படி மாறுபட்ட பேச்சுக்களால் அவநம்பிக்கை எழுந்துள்ளது.. எடப்பாடி டீமில் உள்ளவர்களும், ஓபிஎஸ் தரப்பில் உள்ளவர்களும்கூட, மாநில தலைமை மீது அப்செட்டில் உள்ளார்கள்..

கரு.நாகராஜன்

கரு.நாகராஜன்

இப்போதைய இடைத்தேர்தலில் வெறும் 24 சதவீதம் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பெற்றிருக்கிறார்.. ஆனால், அதை மட்டுமே நாம் நம்பி கொண்டிருந்தால், எம்பி தேர்தலில் நமக்கு பலன்தராது.. ஒருங்கிணைந்த அதிமுக தேவையாக இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும், பாஜகவை எடப்பாடி டீம் தவிர்த்துவிட்டது என்றெல்லாம் மீண்டும் புகார்களை கொண்டு சென்றுள்ளார்களாம். ஏற்கனவே, பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, கரு நாகராஜன், நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி அனைவருமே அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும்நிலையில், மாநில தலைமை இந்த விஷயத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்டாமல் உள்ளதாகவும் எடுத்து கூறியுள்ளார்களாம்.

420 மலை

420 மலை

இவ்வளவு ரிப்போர்ட்கள் டெல்லிக்கு பறந்துள்ள நிலையில்தான், தற்போது, பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் நேற்று இணைந்துள்ளார்.. அத்துடன், '420 மலை' என்றும் கடுமையாக விமர்சித்துவிட்டு போயுள்ளார்.. இதனால், பாஜக சீனியர்கள் மேலும் கடுமையான அதிர்ச்சியில் உள்ளார்களாம்.. வழக்கமாக மாற்று கட்சியில் உள்ளவர்களை, தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை பாஜக அசால்ட்டாக செய்துமுடித்துவிடும்.. ஆனால், சொந்த கூட்டணி கட்சி என்றும் பாராமல், பாஜகவுக்கே செக் வைத்து கிலியை கிளப்பி விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி..

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

இதனால் எடப்பாடி தரப்பு மீதும், தமிழக பாஜக கோபத்தை கக்க முடியாது.. காரணம், அன்று அதே அதிமுகவில் இருந்த நயினார் நாகேந்திரனைதான், பாஜக தன் பக்கம் அலேக்காக தூக்கி கொண்டுவந்தது.. இப்போது நிர்மல்குமாரை தன்பக்கம் எடப்பாடி இழுப்பதன்மூலம், "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற பேச்சுக்கே இடமில்லை என்று, பாஜகவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, காயத்ரி ரகுராம் முதல் ஒவ்வொரு நிர்வாகியும் பாஜகவில் இருந்து விலகி வரும் சூழலில், இன்னொரு நிர்வாகியும் விலகியுள்ளது, தமிழக பாஜகவுக்கு அடுத்த பலவீனமாகவும் கருதப்பட்டு வருகிறதாம்.

முளைத்த பிரச்சனை

முளைத்த பிரச்சனை

பாஜகவுக்குள் மட்டும்தான் உட்கட்சி பூசல்கள் பெரிதாக இருக்காது.. ஆனால், சமீபகாலமாகவே, பூசல்கள் இந்த கட்சிக்குள்ளும் புகுந்துள்ளதும், அதனால் பதவி விலகல்களும் அதிகரித்து வருவதாக கூறுகிறார்கள்.. அடுத்தடுத்த சலசலப்புகள் முளைத்து வரும் சூழலில், அனைத்தையும் பாஜக மாநில தலைமை சமாளிக்குமா? கட்சிக்குள்ளேயே வலம்வந்து கொண்டிருக்கும் அதிருப்திகளை களைய முன்வருமா? ஒருங்கிணைந்த அதிமுகவுக்குள், எடப்பாடியை கொண்டுவர என்ன செய்ய போகிறது? திமுகவுக்கு எதிரான வலிமைவாய்ந்த கூட்டணியை எப்படி பாஜக பலப்படுத்த போகிறது? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

ஃபார்ம் ஹவுஸ்

ஃபார்ம் ஹவுஸ்

இப்படிப்பட்ட சூழலில்தான், ஈரோடு இடைத்தேர்தல் தோல்வியையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை 9- ந்தேதி கூட்டியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தோல்விக்கான காரணங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என்கிறார்கள்.. ஆனால், ஏற்கனவே இந்த தோல்விகள் குறித்தெல்லாம் பல்வேறு தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. இதையெல்லாம் அந்த கூட்டத்திலேயே ஓபனாக போட்டு உடைத்து, தவறு செய்துள்ள மாஜிக்கள், நிர்வாகிகளை எச்சரிக்கை செய்ய போவதாகவும் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, தேர்தல் பணி செய்யாமல் ஃபார்ம் ஹவுசில் தங்கி ஜாலியாக இருந்த நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட போட்டோக்களும் ஆதாரங்களாக எடப்பாடி வசம் சென்றுள்ளதாம்.. இந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியிருக்கிறாராம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+