அண்ணாமலை அழுதாரே ஞாபகமிருக்கா? அதைவிடுங்க, அதிமுக "கோட்டை" விட்ட இடத்தில், திமுகவின் "கோட்டை".. பலே
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் பலவிதமான திருப்பங்களை களத்தில் ஏற்படுத்தி வருகின்றன.. தமிழ்நாட்டில் பாஜக சறுக்கியது எங்கே? திமுக ஜெயித்தது எங்கே?
இந்த முறை தமிழக பாஜக தனித்து களம் கண்டாலும், பிரதான வெற்றியை பெறாது என்றே அரசியல் விமர்சகர்கள் கணித்து வந்தனர்.. கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தாலும்கூட, திமுக கூட்டணி பெருத்த நம்பிக்கையுடன் காணப்பட்டது.

அண்ணாமலை: இத்தனைக்கும், பாஜக வேட்பாளர்களாக, பிரபலங்களே பிரதானமாக களமிறக்கப்பட்டனர்.. இதில் மாநில தலைவர் அண்ணாமலையிடம் பெரிதும் ஈர்த்திருந்தது அவரது பிரச்சாரங்கள்தான்..
கடைசி நாள் பிரச்சாரத்தின்போதுகூட, கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் முதியோர் இல்லத்திற்கு சென்று ஓட்டு சென்றார். அப்போது பெற்றோரின் பிள்ளைகள் வளர்ப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தவர் திடீரென கண் கலங்கி அழுதுவிட்டார்.. உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தினார்கள்.
வியூகங்கள்: அதுமட்டுமல்ல, அருந்ததியர் வீட்டில் உணவு அருந்தியது, நள்ளிரவில் கோவை ரோட்டில் போராட்டம் நடத்தியது என கடைசிவரை பரபரப்புடனேயே தொகுதியை வைத்திருந்தார் அண்ணாமலை. ஆனாலும் கோவையில் மண்ணை கவ்வியிருக்கிறது.. அதேசமயம், அண்ணாமலைக்கு இருந்த செல்வாக்கு, பிரதமர் மோடியின் பிரச்சாரம் போன்றவை காரணமாக, தற்போது தமிழக அரசியலில் முக்கிய இடம் கிடைத்திருப்பதை மறுக்க முடியாது.
ஆனால், திமுக கூட்டணி முன்பு பாஜக, அதிமுகவின் அத்தனை வியூகங்களும் நொறுங்கிவிட்டன.. திமுகவின் இந்த அபார வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி: கடந்த தேர்தலை போலவே, இந்த தேர்தலிலும் திமுகவுக்கு பலம் சேர்த்திருக்கின்றன கூட்டணி கட்சிகள்.. கடந்த முறை எடப்பாடி பழனிசாமி சறுக்கியது இந்த கூட்டணி விஷயத்தில்தான்.. ஆனால், திமுகவோ, சிந்தாமல் சிதறாமல் கூட்டணியின் வாக்குகளை அப்படியே அள்ளியிருக்கிறது. அதேபோல, திமுகவுக்கு எப்போதுமே கூடுதல் பலத்தை தருவது சிறுபான்மையினர் ஓட்டுக்கள்தான்.
இந்த ஓட்டுக்களை பெறுவதற்காகவே, பாஜகவை கூட்டணியிலிருந்து எடப்பாடி பழனிசாமி கழட்டிவிட்டார்.. ஆனாலும், சிறுபான்மையின ஓட்டுக்கள் பெருவாரியாக திமுகவுக்கு கிடைத்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அதிமுகவுக்கு இதுவரை சென்ற சிறுபான்மையின ஓட்டுக்கள், இந்த முறை திமுக பக்கம் திரும்பிவிட்டன.. கோவையில் இந்த மாற்றத்தை வெளிப்படையாகவே காண முடிகிறது. பாஜகவுக்கு எதிரான சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைத்திருப்பதே இன்னொரு பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்பட்டு வருகிறது.
வாக்கு வங்கி: அதேபோல, அதிமுகவை பொறுத்தவரை, அக்கட்சிக்கு முக்கிய பலமே அதன் வாக்கு வங்கிதான்.. ஆனால், சமீபகாலமாகவே வாக்கு வங்கிகளில் சறுக்கலை சந்தித்து வருவதாகவே தெரிகிறது..
கடந்த லோக்சபா தேர்தலில், அதிமுக 21 தொகுதிகளில் போட்டியிட்டு, 30.27 சதவீத ஓட்டுகளை பெற்றது. இந்த முறை 35 தொகுதிகளில் போட்டியிட்டு, 20.46 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றிருக்கிறது என்றால், அதிமுக சறுக்கியது எங்கே என்பதை அறிய வேண்டியிருக்கிறது.
பாஜக: பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டும்கூட, பெருவாரியான வாக்குகளை அள்ளவில்லை.. அவ்வளவுஏன்? செல்வாக்கு நிறைந்த தொகுதி என்று சொல்லப்படும் தென்சென்னையில்கூட 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது பாஜக 2வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. கிட்டத்தட்ட 10 தொகுதிகளில் அதிமுகவை 3வது இடத்துக்கு தள்ளி மேலே சென்றிருக்கிறது பாஜக.
பாஜக 12 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறது என்றால், அதிமுக 11 தொகுதிகளில் 3ம் இடத்தை பெற்றிருக்கிறது.. அதிலும் 1 தொகுதியில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்துவருகிறது.
அதிமுக: தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்று அண்ணாமலை 2 வருடமாக சொல்லி கொண்டிருக்கிறார்.. அப்படியிருந்தும்கூட, பாஜகவிடம், பலம்வாய்ந்த அதிமுக சறுக்கியிருக்கிறது.
வலுவான கோட்டை என்று சொல்லக்கூடிய கொங்கு உட்பட அதிமுக சரிவை நோக்கி செல்ல என்ன காரணம் என்பதையும் ஆராய வேண்டியிருக்கிறது... அதேபோல, திமுகவின் மாஸ் வெற்றிக்கு என்ன காரணம் என்பதையும் கற்க வேண்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications