காரணமே வேற இருக்கு போல.. அவசர அவசரமாக பாஜக மீட்டிங் நடக்குது.. காங்கிரஸும் பதிலுக்கு இறங்கியடிக்குது
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கே பிரதான வெற்றி கிடைக்கும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் வெளியாகியிருக்கும் நிலையில், டெல்லியில் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
இந்நிலையில், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவின் இல்லத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், இது எதற்கான ஆலோசனை என்று தெரியவில்லை..

பரபரப்பு: மத்திய அமைச்சர் அமைச்சர் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வெளியான நிலையில் பாஜக மூத்த நிர்வாகிகள் இப்படி ஆலோசனை மேற்கொண்டு வருவது, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் கவனத்தையும் திருப்பி வருகிறது.
நேற்று மாலையே பிரதமர் மோடி தலைமையில், ஜேபி நட்டாவும், உள்துறை அமித்ஷாவும் ஆலோசனைகளை பிரத்யேகமாக மேற்கொண்டிருந்தனர்.. லோக்சபா தேர்தலுக்கான கருத்து கணிப்புகள் எவ்வாறு இருந்தன? அதன் தாக்கங்கள் எப்படி எதிரொலிக்க போகின்றன? என்பது குறித்து நேற்றைய தினம் இவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
பாஜக ஏற்பாடுகள்: இன்றைய தினம், அதுகுறித்த ஒரு விளக்கத்தைதான், பாஜக நிர்வாகிகளுக்கு நட்டா அளித்து வருகிறாராம்.. மேலும், அருணாசல பிரதேசத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருவதாக சொல்கிறார்கள்.. இதைத்தவிர, நாளைய தினம், வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளதால், பாஜக தரப்பில் ஏற்பாடுகள் அனைத்தும் எப்படி உள்ளன? என்ற பாதுகாப்பு விஷயங்கள் முதல் அனைத்தையும் இன்று ஆலோசித்து வருகிறார்களாம்.
இதற்கு நடுவில், டெல்லி வந்துள்ள நிதிஷ்குமாரும், பாஜக மூத்த தலைவா்களை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.. காரணம், பாஜக கூட்டணியில் பிரதான கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் விளங்குகிறது.
நிதிஷ்குமார்: அதனால், மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் பங்கேற்பது குறித்து பாஜக மூத்த தலைவா்களுடன் ஆலோசிப்பதற்காக நிதிஷ் டெல்லி விரைந்துள்ளதாக சொல்கிறார்கள்..
அதுமட்டுமல்ல, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, சிறப்பு நிதி ஒதுக்கீடு போன்றவை அந்த மாநில அரசின் முக்கிய கோரிக்கைகளாக திகழ்ந்துவரும் நிலையில், இது தொடா்பாகவும் நிதிஷ் குமாா் சில கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைப்பாா் என்று தெரிகிறது. அதுவும் இல்லாமல், மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி வரும் நிதியை அதிகரிப்பது குறித்தும் நிதிஷ்குமார் ஆலோசனை மேற்கொள்ள போவதாக தகவல்கள் கூறுகின்றன.
காங்கிரஸ்: பாஜகவில் இப்படியொரு அனல் அடித்து கொண்டிருக்க, காங்கிரஸிலோ அதற்கு மேல் வெப்பம் தகித்து காணப்படுகிறது.. பெரும்பான்மை கிடைத்தால் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் தரப்பிலும் ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் கிடைத்திருக்கிறது.. இதனால் தேசிய அரசியலில் ஒருவித பரபரப்பு எகிறி வருகிறது.
-
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications