Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தல"க்கு தில்ல பாத்தீங்களா.. சிலந்தி வலையில் சிக்காமல் எகிறிய "லீடர்".. அடித்தாடும் எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? முறியுமா? என்றே தெரியவில்லை.. இந்த 2 நாட்களாகவே, ஏகப்பட்ட சலசலப்புகளும், அதையொட்டிய பரபரப்புகளும் இரு கட்சிக்குள்ளிருந்தும் வெடித்து கிளம்பி உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக பலவீனமாகவே இருக்கிறது.. ஆனால், ஓரளவு வளர்ந்துள்ளதாகவே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எனினும், கூட்டணியை நம்பியே தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைமையில் உள்ளது..

அந்தவகையில், அதிமுகவுடனான கூட்டணியை நம்பி உள்ளது.. இத்தனைக்கும் அதிமுக கட்சிக்குள் ஏகப்பட்ட பிளவுகளும், பிணக்குகளும், வெடித்தன.. பிரிந்தவர்களை ஒன்றுபடுத்த பாஜக மேலிடமும் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தது..

Are these the reasons for the dissatisfaction of the AIADMK BJP alliance

பழனிசாமி: ஆனால், அத்தனையும் தோற்றுபோனது.. அதேசமயம், தனிநபராகவே, தனக்கு முன்னால் நின்ற சவால்களை எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சாதுர்யத்தால் வென்று முடித்தார்.. சட்ட போராட்டங்களை நடத்தி, கட்சியையும் தன்வசமாக்கினார்.. இவ்வளவையும் கவனித்து வந்த மேலிட பாஜக, எடப்பாடி பழனிசாமி தலைமையை அங்கீகரித்ததுடன், அவருக்கு ஆதரவாகவே இப்போதும் இருந்து வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிமுக - பாஜக கூட்டணியை, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உறுதிசெய்திருந்தார்.

திடீர் காரணம்: ஆனாலும்கூட, திடீரென என்ன நடந்தது? அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில்கூட, அமித்ஷா - எடப்பாடியின் சந்திப்பு நடக்கவேயில்லை. கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையிலும் இந்த சந்திப்பு நடக்கவில்லை.. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திவிட்டு போயுள்ளது..

இன்றைய தினம், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், அமித்ஷாவை சந்திக்க வேண்டியது வரும் என்பதற்காகவே, இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி தள்ளி வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. கூட்டணியாக இருந்தாலும் இப்படி ஒரு பிணக்கம் ஏன் ஏற்பட்டது?

Are these the reasons for the dissatisfaction of the AIADMK BJP alliance

அதிகார மோதல்: அதிகார பிரச்சனையே இதற்கு காரணம் என்கிறார்கள்.. சட்டமன்ற தேர்தலே என்றாலும்கூட, அது தங்கள் தலைமையிலான கூட்டணியில்தான் அமைய வேண்டும் என்றே பாஜக மேலிடம் நினைக்கிறதாம்.. கூட்டணியில் ஒற்றை படை இலக்கத்தில் தங்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டாலும்கூட, கூட்டணிக்கு தாங்கள்தான் தலைமையேற்று வழிநடத்த வேண்டும் என்பதுதான் பாஜகவின் கணக்காக இருக்கிறதாம்..

சட்டமன்ற தேர்தலுக்கு அப்படியென்றால், எம்பி தேர்தலில் அதிமுகவுக்கு இணங்கி பாஜக எப்படி செயல்படும்? இந்த இடத்தில்தான், தமிழக பாஜக தலைமை கருத்தியலாக வேறுபடுகிறது என்கிறார்கள்.

நிரூபணம்: கிட்டத்தட்ட இதே மனநிலைமையில்தான் அதிமுகவும் உள்ளதாம்.. தேசிய கட்சியான காங்கிரஸ், திமுகவின் கட்டுப்பாட்டில் இருப்பதைப்போல் பாஜகவும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி நினைப்பதாக தெரகிறது.. ஆனால் அண்ணாமலையோ தன்னுடைய தலைமையின் கீழ் கட்சி வலிமை பெற்றுள்ளது என்பதை தனித்து நின்றுகூட நிரூபித்து காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது போல தெரிகிறது..

தொகுதி விவகாரம்: இன்னொரு விஷயமும் உள்ளது.. பாஜக கையில் ஒரு லிஸ்ட் உள்ளது.. தங்களுக்கு எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்புகள் என்பது குறித்து ஆய்வு நடத்தி அந்த லிஸ்ட்டை கையில் வைத்துள்ளது. குறிப்பாக, தென் சென்னை, வேலூர், கோவை, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளை தேர்வு செய்து அதில் மட்டும் தனி கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், அதிமுகவிடம் சீட் கேட்பது அதைவிடவும் ஒரு மடங்கு அதிகமாக உள்ளது.

இந்த நிலைப்பாடும் எடப்பாடி பழனிசாமியை அதிருப்தி அடைய செய்துள்ளதாம். அதனால்தர்ன, கூட்டணி, தொகுதிகள் என்பது பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அமித்ஷாவை சந்திக்காமல் தவிர்த்து விட்டதாகவும் சொல்கிறார்கள்..

நெருங்கலையே: இப்படியான யூகங்கள் ஒருபக்கம் இருந்தாலும், அமித்ஷாவிடம் யாரையுமே நெருங்காமல் பார்த்து கொண்டதாம், பாஜக தலைமை... இன்னும் சொல்லப்போனால், அமித்ஷாவின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இயக்கியது அண்ணாமலையின் வார் ரூம் தரப்பினர்தானாம். இதனால் சில சீனியர்கள் அதிருப்தியானதாகவும் சொல்கிறார்கள்.. அதனால்தான், மூத்த தலைவர்கள், எச்.ராஜா, வானதி சீனிவாசன் போன்றவர்கள்கூட அமித்ஷாவை நெருங்கமுடியவில்லை என்றும் காரணம் சொல்கிறார்கள்..

இதன்காரணமாகவே, முதல் நாள் தென்சென்னை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர், அமித்ஷாவின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை புறக்கணித்துவிட்டார்களாம்.

சுழலும் புயல்: அதைவிட முக்கியமாக, அண்ணாமலையின் செயல்பாட்டை வேலூரில் அபரிமிதமாக பாராட்டவும், இதைக்கேட்டும் பாஜகவில் ஒரு தரப்பினர் அப்செட் ஆகி உள்ளார்களாம்.. ஆக, பாஜகவுக்குள்ளேயே அனல் அடித்து கொண்டிருக்கிறது என்றால், கூட்டணிக்குள்ளே சூறாவளியே அடித்து கொண்டிருக்கிறது.. எப்படியோ, விரைவில் இரு தரப்பினரும் ஒன்று சேர வேண்டும் என்பதே, இரு கட்சி தொண்டர்களின் ஆழ்மனசு எண்ணமாக இருக்கிறது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+