சென்னை டூ திருச்சி.. தமிழகத்தையே கதறவிட்ட "பொன்னி".. புட்டு புட்டு வைக்கும் வியாபாரிகள்.. மறுபடியுமா
சென்னை: தமிழ்நாட்டில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்தபடியே வருகிறது.. இதற்கு என்ன காரணம்? வியாபாரிகள் சொல்வது என்ன?
அரிசியின் விலை, சில மாதங்களாகவே உயர்ந்துவந்த நிலையில், இப்போது இன்னும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு, பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு வழங்காததால், குறுவை சாகுபடி குறைந்து, அரிசி விலை உயர்ந்ததாக சொன்னார்கள். பிறகு, பருவமழை காரணம் என்கிறார்கள்..

மழை வெள்ளம்: மழை, வெள்ளம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நெல், அரிசி போன்றவற்றின் வரத்து குறைந்துவிட்டது என்றார்கள்.. பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் போன்றவற்றை, 5 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பு வெளியானதால், அரிசி விலை உயர்ந்தது என்றார்கள்..
எனவே, கடந்த 6 மாத காலமாகவே, கர்நாடக பொன்னி, மைசூர் பொன்னி அரிசிகளின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.4 வீதம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை விலை அதிகரித்தது. இந்த விலை உயர்வு தொடர்ந்தால், டிசம்பர், மற்றும் ஜனவரியிலும்கூட அரிசி விலை குறையாது என்று வியாபாரிகள் கவலை தெரிவித்திருந்தார்கள்.. அதன்படியே, தற்போது அரிசி விலை உயர்ந்துள்ளது.
திருச்சி மாவட்டம்: முக்கியமாக, திருச்சி மாவட்டத்தில் சாகுபடி மையங்களில் இருந்து நெல் வரத்து குறைந்துள்ளதால், அரிசி விலையில் உயர்வு காணப்படுகிறது.. மணச்சநல்லூர் அரியமங்கலம், காட்டூர் பகுதிகளில் நிறைய அரிசி ஆலைகள் உள்ள நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளிலிருந்து இங்கெல்லாம் நெல் கொண்டுவரப்படுகிறது.
மேலும், இந்த ஆலைகள் கர்நாடகாவிலிருந்தும் நெல்லை பெற்றுக் கொள்கன்றன. இப்படிப்பட்ட சூழலில், நெல் வரத்து வெகுவாக குறைந்துவிட்டதாகவும், அதனாலேயே அரிசி விலையில் உயர்வு தென்படுவதாகவும் கூறுகிறார்கள்.
அரிசி விலை அதிர்ச்சி: கடந்த வருடம் இதே ஜனவரியில், 1 கிலோ ஆர்என்ஆர் அரிசி ரூ. 46-க்கு விற்கப்பட்ட நிலையில், அது தற்போது ஒரு கிலோவுக்கு ரூ. 55 முதல் 60 வரை விற்பனையாகிறது.. பொன்னி அரிசி கிலோ 65 ரூபாயாக உள்ளது..
இதற்கெல்லாம் காரணம், தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களிமே சாகுபடி மையங்களில் இருந்து வரத்து குறைவாக உள்ளதாம். இதைத்தவிர, டெல்டா பகுதியில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் வரத்து குறைந்துள்ளதால், தேவைக்கும் சப்ளைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டதுடன், சம்பா பருவ சாகுபடியை மேற்கொள்ளாததாலும், நெல் வரத்து இனியும் சரிய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மேலும் உயரும்: மொத்தத்தில், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நெல் பற்றாக்குறை 20 சதவீதம் அதிகரித்துள்ளதால், அடுத்த சம்பா பருவம் வரை, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா என அண்டை மாநில அரிசி ஆலைகளையே சார்ந்திருக்கும் சூழல் உருவாகி வாய்ப்புள்ளதாகவும், இதனால் அரிசி விலை இனிவரும் நாட்களில் இன்னும் மேலும் உயரக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications