"ஆப்பு".. அந்த கட்சிக்கு பிரபல நடிகர் "பச்சை சிக்னல்"? கோபாலபுரத்துக்கு போன் போகலயாமே.. அப்ப கூட்டணி
சென்னை: திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறார்கள் யார் யார்? என்ற ஆர்வம் தொடர்ந்து எழும் வரும்நிலையில், விஜயகாந்த்தின் தேமுதிக சார்பில் முக்கிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
கடந்த மாதம் டெல்லியில் கூட்டணி கட்சிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். மேலும் கூட்டணி கட்சிகளும் கலந்து கொண்டுள்ளன. கிட்டத்தட்ட அதிமுக - பாஜக கூட்டணி அப்போதே உறுதியானதாக தெரிகிறது.
ஆலோசனை: ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தேமுதிக அழைக்கப்படவில்லை.. இதனால் ரொம்பவுமே நொந்து போயிருந்திருக்கிறார் பிரேமலதா. இத்தனைக்கும் தமாகா, புதிய பாரதம் போன்ற கட்சிகளைவிட, தேமுதிக அதிகமாகவே வாக்கு சதவீதத்தை வைத்திருக்கிறது... அப்படியிருந்தும், நம்மை புறக்கணித்துவிட்டார்களே என்ற வேதனை பிரேமலதாவுக்கு இருப்பதாக தெரிகிறது.

அதனால்தான, பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ், கூட்டத்துக்கு அழைக்காதது குறித்து தமிழக பாஜக தலைவர்கள் சிலரின் மூலமாக டெல்லியை அணுகினாராம்..
அதற்கு சுதீஷிடம் டெல்லி தரப்பில் கூறும்போது, "தமிழகத்திலிருந்து எந்த கட்சிகளை அழைப்பது என எடப்பாடி பழனிச்சாமியிடம் நாங்கள் கேட்டோம்.. அவர் தேமுதிக பெயரையே சொல்லவில்லையே" என்று பதில் தரப்பட்டதாம். இதைக்கேட்டு மேலும் கடுப்பான, பிரேமலதா, உடனே தன் பார்வையை திமுக பக்கம் திருப்பியதாக தெரிகிறது.. உடனடியாக, கோபாலபுரத்துக்கு போனை போட்டு, திமுகவின் குடும்ப பெண் உறவுகளை தொடர்புகொண்டு நலம் விசாரிப்பதாக செய்திகள் கசிந்தன.
இந்நிலையில், நேற்று நடந்துமுடிந்துள்ள ஆர்ப்பாட்டத்தை பார்த்தால், திமுகவுடனும் தேமுதிகவுக்கு கூட்டணி இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது.
மாநில அரசை கண்டித்து, நேற்றைய தினம் தேமுதிக பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளது.. அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும், தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து.
விருத்தாச்சலம் பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சென்னை, எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்றனர்.
மதுவிலக்கு: தமிழக அரசு மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், விவசாய நிலங்கள் பாதுகாக்க வேண்டும், தமிழகத்தில் நாளுக்கு நாள் கஞ்சா போதையால் நடைபெறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் கண்டித்தும், விளை நிலங்களை அழித்து வரும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுகவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்துள்ள நிலையில், அதிமுகவும் இல்லை, திமுகவும் இல்லை என்றால், வேறு யாருடன்தான் தேமுதிக கூட்டணி வைக்க போகிறது? என்ற அடுத்த சந்தேகம் கிளம்பி உள்ளது.
இதுகுறித்து நமக்கு சில தகவல்களும் கிடைத்துள்ளன.. கடந்த மாதம் 24ம்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார் பிரேமலதா.. இந்த கூட்டத்தில் சில முக்கிய விஷயங்களை, மாவட்ட செயலாளர்களிடம் பிரேமலதா விவாதித்துள்ளார். குறிப்பாக, பாஜக-அதிமுக கூட்டணியில் நமக்கு இடமில்லை என்றால், அடுத்து என்ன முடிவு எடுக்கலாம்? என்றெல்லாம் கேட்டதாக தெரிகிறது.
முக்கியம்: இதற்கு பிறகு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும்போதே செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார் பிரேமலதா. அப்போது, செய்தியாளர்கள் "திமுகவுடன் பேசினீர்களாமே" என்று கேட்டார்கள்.
அதற்கு பிரேமலதா, "திமுகவுடன் நாங்கள் ஏன் பேச வேண்டும்? அதற்கான அவசியம் எங்களுக்கு துளியும் இல்லை" என்று மாவட்ட செயலாளர்கள் முன்னிலையிலேயே காட்டமாக கூறியிருந்தார். இதன்மூலம் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அப்போதே முடிவாகிவிட்டது.
இதற்கு பிறகு, விஜயகாந்த் பாணியிலேயே, விஜய்யின் அரசியல் பயணம் மேற்கொள்ளப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பிரேமலதா, "விஜயகாந்த் போல யார் வரவேண்டும் என்று நினைத்தாலும், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என்றார்.
பிரேமலதா இப்படி சொல்ல காரணம், 3வது பெரிய சக்தியாக உயர்ந்த தேமுதிகவை, யார் அழிக்க காரணமாக இருந்தார்களோ, அவர்களே, விஜய்யின் வளர்ச்சியையும் அழிக்க காரணமாக இருந்துவிடக்கூடும். இந்த அர்த்ததையே, பிரேமலதா அன்று செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தியிருந்தாராம்.
நடிகர் விஜய்: இந்நிலையில்தான், நடிகர் விஜய்யின் அரசியல் இங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி உள்ள நிலையில், அரசியலுக்கு வருவதாக விஜய் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.
பனையூரில் உள்ள அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வரும்நிலையில், அவரது அரசியல் வருகை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஒருவேளை விஜய், வரப்போகும் தேர்தலில் போட்டியிட நேரும்பட்சத்தில், தேமுதிக இணையும் வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். விஜயகாந்த் என்ற மாபெரும் மனிதர் அன்று இல்லாவிட்டால், இன்று விஜய் என்ற மிகப்பெரிய சக்தி தமிழகத்துக்கு கிடைத்திருக்க மாட்டார்.. விஜய்யின் ஆரம்ப கட்ட வளர்ச்சியில் ஏணியாய் நின்று உதவியவர் விஜயகாந்த் என்பதை நன்றியுடன் நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.
சினிமா, அரசியல்: சினிமா, அரசியல் வேறு வேறு என்றாலும், அடிப்படை புரிதலும், இணக்கமும் கட்சி தலைவர்களுக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. அந்தவகையில், விஜய் அரசியலில் தீவிரம் எடுக்க நேர்ந்தால், தேமுதிகவும் அவருடன் இணைந்து செயல்படும் என்கிறார்கள்.
ஒருவேளை, இந்த யூகங்கள் அனைத்துமே நிரூபணமானால், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக, விஜய் + விஜய்காந்தின் தொண்டர்கள் மிகப்பெரிய மாற்றத்தை விதைப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.
எந்த கட்சியுமே மக்களிடம் நெருங்கியிருக்கும்போதுதான், முக்கியத்துவத்தை பெறுகிறது.. அந்தவகையில், இத்தனை நாளும் பட்டும்படாமல் ஒதுங்கியிருந்த தேமுதிக, சமீபகாலமாகவே, போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று தன்னுடைய களத்தையே அதிர வைத்து கொண்டிருக்கிறது. தொய்வில் சோர்ந்து போயிருந்த, தேமுதிக தொண்டர்களும் வீறுகொண்டு எழுந்துள்ளனர்..
மாற்றம்: சாதி, மதம் என பாகுபடற்ற அனைவருக்குமான அரசியலை விஜய் முன்னெடுக்கும்பட்சத்தில், இதேவிதமான அரசியலை முன்னெடுத்துவரும் தேமுதிகவும் ஒன்றிணைந்தால், அதில் ஆச்சரியம் இருக்க போவதில்லை என்கிறார்கள். அரசியல் என்பதே, எதுவும் மாறக்கூடியதுதானே.. மாற்றத்தை நோக்கி தமிழக அரசியல் முதல் அடியை எடுத்து வைத்துள்ளதாக தெரிகிறது.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
விஜயகாந்த் வெற்றி பெற்ற அதே தொகுதி.. சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் பிரேமலதா? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications