இரவில் சின்ன பசங்க ஒரே அராஜகம்.. பாதுகாப்பும் இல்லை! துப்புரவு பெண் தொழிலாளிகளின் கண்ணீர்: Exclusive
சென்னை: சின்ன வயசு பையன்கள் ரொம்ப மோசம்.. கொஞ்சமும் வயது வித்தியாசம் இருப்பதில்லை.. 16, 17 வயசிலேயே இப்படி இருக்காங்களே என்று அதிர்ச்சியாக இருக்கும்.. இப்படி நடக்கும்போதெல்லாம் எங்களுக்குள் ஒருவித பயம் வந்துவிடுகிறது.. நாங்கள் புத்தி சொன்னாலும், நிதானத்திலும் அவர்கள் இருப்பதில்லை என பெண் துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் பணியில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து வேதனை தெரிவிக்கிறார்கள்.
இரவு பகலாக அர்ப்பணிப்போடு பணியாற்றி களப்பணி செய்து வருபவர்கள் தூய்மைப் பணியாளர்கள்.. எனவேதான், கூடுதல் மரியாதையாக தமிழக முதல்வரும் துப்புரவுப் பணியாளர் என்ற கீழ்மையை போக்கும் வகையில் "தூய்மைப்பணியாளர்கள்" என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.

பல வருட காலமாகவே பொருளாதார விளிம்பு நிலைக்கு கீழே வாழ்க்கையை கழித்து வருபவர்களாகவே தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர்...
பணி பாதுகாப்பு
நிரந்தரப் பணிப் பாதுகாப்பு, போதுமான ஊதியம், பறிபோகும் உரிமைகள் போன்ற பிரச்சனைகளுக்கு நடுவே, பெண் துப்புரவு தொழிலாளிகளின் பாதுகாப்பும் மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.
போற்றுதலுக்குரிய சேவையை செய்து தரும் துப்புரவு பெண் தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய கட்டாயமும் அரசுக்கு உள்ளது..
சிக்கல்கள், துயரங்கள்
வணங்கத்தக்க, போற்றுதலுக்குரிய, பாராட்டத்தக்க இத்தகைய பெண் துப்புரவு தொழிலாளிகள், தினந்தோறும் தங்கள் பணியில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இன்னல்கள் அதிகம்.. இதுபோன்ற துயரத்திலிருந்து விடுவித்து கொள்ள அவர்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும், குடும்ப பாரம், அவர்களை நடுத்தெரு நள்ளிரவு பணிகளில் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது.
இந்நிலையில், நம்முடைய Oneindia Tamil யூடியூப் சேனலுக்கு, அப்பெண் தொழிலாளிகள் சிலர் தங்களது இன்னல்களை, வேதனைகளை, மனக்குமுறலை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.. அதன் சுருக்கம்தான் இது:
இரவு நேர பணியில் இன்னல்கள்
"ரொம்ப கஷ்டம் இந்த வேலையை செய்வது.. இந்த வேலைகளை செய்யணும்னு எங்களுக்கொன்றும் தலையெழுத்து இல்லை.. குடும்ப சூழல் காரணமாக இந்த வேலைக்கு வந்துள்ளோம்.. அதிலும் இரவு நேரத்தில் வேலை செய்யும்போது பல கஷ்டங்களை சந்திக்கிறோம்.. நாங்கள் பெருக்கிட்டே இருக்கும்போது, வயசு பையன்கள் வந்து நின்று கொள்வார்கள்..
கொஞ்சம் தள்ளி போங்கப்பா என்று சொன்னாலும், அங்கேயே நின்னுட்டு எங்களை பார்த்துட்டு இருப்பாங்க.. சில பேர் கஞ்சா அடித்துவிட்டும், குடித்துவிட்டும் வந்து எங்களிடம் போன் நம்பர் கேட்பாங்க.. நம்பர் தராவிட்டாலும் பின்னாடியே நம்பர் கேட்டுட்டு வருவாங்க..
ஒரு இடத்தை பெருக்குவதற்காக சென்றால், வேண்டுமென்றே அதே இடத்தில் நின்று யூரின் போவார்கள்.. நீண்ட நேரமாக அங்கேயே நின்று யூரின் போவதால், எங்களால் அங்கே சென்று பெருக்கவும் முடியாது, அங்கிருந்து வேறு இடத்துக்கு போகவும் முடியாது.. நாங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அங்கேயே நின்று யூரின் போவார்கள்..
கிட்ட நெருங்கி வரும் நபர்கள்
போதைப்பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டதால், சின்ன பிள்ளைகள்தான் இதற்கு அடிமையாகிவிடுகிறார்கள்..இதையெல்லாம் நாங்கள் கண்டும் காணாமல் போக வேண்டிய நிலைமை உள்ளது..
வேலை முடிந்து, பஸ்ஸூக்காக நாங்கள் பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தாலும், அங்கேயும் சிலர் வந்து எங்களையே நோட்டமிடுகிறார்கள்.. அதிலும் தனியாக நின்றால் என்னமோ பேசுவது போலவே கிட்ட நெருங்கி வந்து செல்கிறார்கள்.. தனியா நின்னாலே போதும், எங்கே போகணும், வாங்க நான் கூட்டிட்டு போயி விடறேன் என்று சொல்லி, தங்களது காரை காட்டுவார்கள்..
சின்ன வயசு பையன்கள்
அவர்கள் எங்களிடம் வந்து அசிங்கமா பேசாவிட்டாலும்கூட, அவர்கள் பார்க்கும் பார்வையே பீதியை தந்துவிடுகிறது. கொஞ்சமும் வயது வித்தியாசம் இருப்பதில்லை.. 16, 17 வயசிலேயே இப்படி இருக்காங்களே என்று அதிர்ச்சியாக இருக்கும்.. இப்படி நடக்கும்போதெல்லாம் ஒருவித பயம் வந்துவிடுகிறது.. நிதானத்திலும் இருப்பதில்லை.. நாம் சொல்வதையும் அவர்களால் அந்த நிலைமையில் கேட்க முடியாது.
வண்டியில் வருபவர்கள் வேண்டுமென்றே, வேகமாக கிட்ட வந்துட்டு போவாங்க.. அதேபோல எங்களுக்கு பாத்ரூம் வசதி கிடையாது.. எல்லா ஆபீசும் மூடிவிடுவதால் எங்களால் கழிப்பறைக்கு செல்ல முடிவதில்லை.. இதனாலேயே நாங்கள் சாப்பிடாமலேயே வேலைக்கு வந்துவிடுவோம்..
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு
சிலர் வேண்டுமென்றே எங்களது ஷோல்டரை தட்டி, பஸ் ஸ்டாண்டு எங்கே என்று கேட்பார்கள்.. போன மாசம் இந்த பகுதியில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண்ணின் முந்தானையை ஒருவர் பிடித்து இழுத்துவிட்டார்.
இதனால் அந்த பெண், இங்கு வர பயந்துகொண்டு, வேறு பகுதியில் வேலை பார்த்து வருகிறார்.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இப்படித்தான் ஒரு சின்ன பையன் வந்து என் பக்கத்தில் வந்து நின்றான்.. அவனுக்கு பேசக்கூட தெரியல..
பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து, வர்றியா என்கூட?ன்னு என்னிடம் கேட்டான்.. டீ குடிக்கலாமா? பஸ்ல போலாமா? என்று கூப்பிட்டான். உடனே நான் என் தாலிக்கயிறை காட்டி, என் வீட்டுக்காரர் இப்ப வந்துடுவார், அதுக்காக இங்கே உட்கார்ந்திருக்கேன் என்றேன்.. உடனே எழுந்து ஓடிட்டான்..
ஒரு முத்தம் தர்றியா
தாத்தா ஒருவர் ஆட்டோவில் சென்றவர் திடீரென வண்டியை நிறுத்தி, ஒரு முத்தம் தர்றியாமா? என்று கேட்கிறார்.. உடனே நான் அதிர்ச்சியடைந்து, "அப்பா, என்ன இப்படி கேட்கிறீங்க" என்றேன்? "அதனாலென்னமா, ஒரு முத்தம்தானே கேட்டேன்" என்கிறார்? இவருக்கு மனைவி, பிள்ளைகள் வீட்டில் இருக்க மாட்டார்களா?
எங்களிடம் ஆபாசமாக பேச வந்தால், கொஞ்சம் கோபமாக பேசினால், உடனே சாரி..க்கா என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள்.. நாங்கள் அமைதியாக இருந்தால், அது அவர்களுக்கு அடுத்த கட்டத்துக்கு போக வழிவகுக்கிறது. ஆனால் உடனே எதிர்ப்பை காட்டினால், அவர்கள் அங்கிருந்து போய்விடுகிறார்கள். மொத்தத்தில் எங்களுக்கு இந்த வேலையில் பாதுகாப்பு இல்லை" என்று குமுறலை எங்களிடம் வெளிப்படுத்தி உள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications