சென்னை ரயிலில் தட்கல் டிக்கெட் புக்கிங் .. இப்படி ட்ரை பண்ணி பாருங்க.. வொர்க் அவுட் ஆக வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் வரும் ஜூன் 10-ந் தேதி திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. ரயிலில் தட்கலில் டிக்கெட் எடுக்க பலரும் முயற்சி செய்து தோல்வி அடைந்திருப்பார்கள். அவர்கள் இந்த முயற்சியை செய்து பாருங்கள்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் 6-ந்தேதி (அதாவது நேற்று) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோடை வெயில் தாக்கம் காரணமாக 10-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. கோடை விடுமுறையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பலர் சொந்த ஊர்கள் மற்றும் உறவினர் இல்லங்களுக்கு பெற்றோர் சென்றுவிட்டார்கள்.

இதேபோல் சென்னையில் வசித்துவரும் பலர் கோடை விடுமுறையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் கோடை விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார்கள். இப்படி வெளியூர் சென்றவர்கள் வருகிற 10-ந் தேதி பள்ளிக்கு செல்வதற்காக சென்னை திரும்பி வருகிறார்கள்.
இவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வரும் 9ம் தேதி 705 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு பஸ்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வருகிறது. ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இப்படியான சூழலில் தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்ய பலரும் முயற்சிக்கிறார்கள். அதில் லட்சத்தில் ஒருவரின் முயற்சியே வெற்றி பெறுகிறது.தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் இந்த இரண்டு விஷயத்தை சரியாக செய்தால் 50 சதவீதம் அளவிற்கு டிக்கெட் முன்பதிவு சரியாக நடக்க வாய்ப்பு உள்ளது. அதனை பற்றி இப்போது பார்ப்போம்.
தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய போகிறீர்கள் என்றால், அதிவேக இணைதள இணைப்புடன் கூடிய டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கணினியில் முயற்சி செய்யுங்கள். தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன்பு , யார் யார் பயணிக்க போகிறீர்களோ, அவர்களின் பெயரை காலையிலேயே ஐஆர்சிடிசி இணையதளத்தில் லாக் இன் செய்து add master list இல் சேர்த்துவிடுங்கள். மாஸ்டர் லிஸ்டை பொறுத்தவரை அனைவரது ஆதார் எண்ணும் வேண்டும். ஆதார் எண்ணை வைத்து சேமித்துவிடுங்கள். அப்படி பெயர்களை சேர்க்கும் போது ஒருவருக்குமேல் லோயர் பர்த் போடாதீர்கள். இதை எல்லாம் சரியாக செய்து வைத்துக் கொண்டால், தட்கல் நேரத்தில் சிக்கல் வராது.
அதேபோல் ஐஆர்சிடிசி வாலட் பேமெண்ட் மோடில் டிக்கெட்டுக்கான பணத்தை போட்டு வைத்துக் கொள்வது நல்லது. அதுதான் சிக்கல் இல்லாமல் பேமெண்ட் போக ஒத்துழைக்கும். மற்ற பேமெண்ட் மோடுகள் சட்டென சிக்கலை உருவாக்கும்.. எனவே டிக்கெட் கட்டணத்தை ஐஆர்சிடிசியின் பிரத்யேக வாலட் பேமெண்ட் மோடில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஐஆர்சிடிசியின் பிரத்யேக வாலட் பேமெண்ட் போடப்படும் பணத்தில் டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தட்கல் முன்பதிவு ஏசிபெட்டிகளில் பயணிக்க 10 மணிக்கும், ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 11 மணிக்கும் முன்பதிவு செய்ய வேண்டும்.11 மணிக்கு ஓபன் செய்ய போகிறீர்கள் என்றால். 10 58க்கு லாக் இன் செய்து உள்ளே சென்றுவிடுங்கள். உள்ளே போய் எந்த பதற்றமோ, தவறுகளோ இல்லாமல் சரியாக மேற்கொள்ளுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய ஊர், கிளம்பும் ஊரை சரியாக கிளிக் செய்து, நாள் நேரத்தை கிளிக் செய்து. எந்த ரயிலோ அதற்கு பக்கத்தில் 11 மணிக்குள் போய்விடுங்கள் .
சரியாக 11 மணி ஆன உடன் ரயிலின் முன்பதிவு செய்யும் லிஸ்டில் ரிப்ரஸ் செய்து கிளிக் செய்யுங்கள். அப்போது தான் டிக்கெட்டை முன்பதிவு செய்ய அனுமதிக்கும். உள்ளே போன உடன், ஏற்கனவே நீங்கள் கிரியேட் செய்த மாஸ்டர் லிஸ்டில் உள்ள பெயர்கள் அப்படியே வந்துவிடும்.நீங்கள் ஒருலெட்டரை அடித்தாலே அவர் பெயர் தோன்றும். அப்படியே செலக்ட் செய்தால் வயது பர்த் என எல்லாமே வரும்.. இப்படியே குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தால் அவர்களின் பெயரை அடித்து செலக்ட் செய்து வைத்துவிடுங்கள்.
அதன்பிறகு புக்கிங் கன்பார்ம் என்றால் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்யட்டும் என்றமோடை கிளிக் செய்து கீழே வந்தால் கேப்சியா கேட்கும். அதனை பதற்றம் இல்லாமல் அடியுங்கள். உள்ளே பேமெண்ட் மோடுக்கு போகும். பேமெண்ட் மோடில் ஐஆர்சிடிசி வாலட் ஆப்சனை செலெக்ட் செய்யுங்கள். சட்டென உள்ளே போய் எந்த சிக்கலும் இல்லாமல் பேமெண்ட் கிளிக் ஆகிவிடும். இப்படி செய்தால் எளிதாக முன்பதிவு செய்யலாம்.
ஒருவேளை ஐஆர்சிடிசி வாலட்டில் பணம் போட முடியில்லை என்றால் பேடிஎம் வழியாக பயன்படுத்தலாம்.. கடைசி நிமிடத்தில் வரும் பேமெண்ட் எரர் இல்லை என்றால் எளிதாக பேடிஎம் இல் உள்ள போய் ஸ்கேன் பே ஆப்சனை செலெக்ட் செய்து மொபைலை வைத்து ஸ்கேன் செய்தால் டிக்கெட் புக் ஆகிவிடும். ஆனால் பொதுவாக அதிகப்படியான மக்கள் புக்கிங் செய்யும் நாட்களில் ஐஆர்சிடி வாலட் தவிர எந்த பேமெண்ட் மோடும் சரியாக ஓர்க் ஆகவது இல்லை.. மொத்தமாக ஐஆர்சிடிசி தளமும் முடங்குவது தொடர்கிறது.












Click it and Unblock the Notifications