1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு.. சென்னையில் இருந்து சொந்த ஊர் போறீங்களா.. இதை நோட் பண்ணுங்க
சென்னை:1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க போறீங்களா.. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு டோக்கன் வாங்காவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
தமிழர்கள் முக்கியமான பண்டிகையான தைப்பொங்கல் திருநாள் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. நான்கு நாள் பண்டிகையான பொங்கலை கொண்டாட மக்கள் ஊருக்கு ஆயத்தமாகி வருகிறார்கள். வழக்கமாக பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாடு அரசு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்புடன் ரொக்கப்பணத்தை பொங்கல் பரிசுத்தொகுப்பாக வழங்கி வருகிறது.

அந்த வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு உள்ளடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று முதல் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்காக வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 10-ந் தேதி (நேற்று) முதல் 13-ந் தேதி வரை (நாளை மறுநாள்) வரை பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டிருக்கிறதுது. இதனால் ரேஷன் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
ரேஷன் கடைகளிலும் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பொங்கல் பரிசுத்தொகுப்பினை முடிந்த வரைவேகமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்று சென்றார்கள். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பெரும்பாலான ரேஷன் கடைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.
வருகிற ஜனவரி 13-ந் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்படும் என்றும் டோக்கன் பெறாதவர்கள் ஜனவரி 14-ந் தேதி அன்று பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்கள். அதேநேரம் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் வசிக்கும் ஏராளமானோர் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக இன்றும், நாளை, நாளை மறுநாள் தான் செல்வார்கள் என்பதால், 12, 13 ஆகிய தேதிகளில் டோக்கன் பெற்றவர்கள் பரிசுத்தொகுப்பை குறிப்பிட்ட தேதியில் பெற முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே சொந்த ஊர் செல்பவர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பின்பு பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு, ரூ.1,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். . இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்கள். வீடுகளில் சொல்லி வைத்து டோக்கன் பெற்றவர்கள் பொங்கலுக்கு முன்பே பொங்கல் பரிசை பெற முடியும்.. மற்றவர்கள் பொங்கல் பண்டிகைக்கு பின் பெறலாம்.












Click it and Unblock the Notifications