Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடு கட்ட போறீங்களா..காலி இடம் வாங்கும் போது.. இந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் கனவு இல்லத்தை கட்ட சென்னை உள்பட எந்த பகுதியில் காலி மனை வாங்கினாலும் சில விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் வாழ்நாளில் சேமிப்பு வீணாகிவிடும்.குறிப்பாக பெரும் நிறுவனங்களில் இடம் வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வீடுகள் விலை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், காலி மனை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, பிரதான நகரங்களின் வெளியில் காலி மனை வாங்கினால் எதிர்காலத்தில் வீடு கட்டி குடியேறலாம் என்று மக்கள் திட்டமிடுகின்றனர்.

Are you going to buy vacant land to build a house in chennai ? Things to be careful about

சென்னை, கோவை, மதுரை உள்பட பல்வேறு நகரங்களிலும் சரி, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வெளியிடும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து மக்கள் பலரும் வீடு கட்ட காலிமனை வாங்க செல்கிறார்கள். அப்படி வாங்க போகும் மக்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

முதலில் நீங்கள் வாங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நம்பகத்தன்மை உடையதா என்பது தெரிய வேண்டும் . உங்களுக்கு தெரியாத அல்லது உங்கள் ஊருக்கு புதிதாக வரும் பெரிய நிறுவனங்களை நம்பி இடம் வாங்குகிறீர்கள் என்றால், கண்டிப்பாக கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இடம் அமைந்துள்ள பகுதிக்கு டிடிசிபி அங்கீகாரம் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். சென்னையின் புறநகர் பகுதி என்றால் சிஎம்டிஏ அப்ருவல் வேண்டும். எங்கு இடம் வாங்குகிறீர்களோ அங்கு அடிப்படை வசதிகள் இருக்கிறதா, நகர்ப்புற வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்.

நீங்கள் இடம் வாங்கும் பகுதியில் தார் சாலை, கழிவு நீர் கால்வாய் வசதி அமைத்துள்ளார்களா, பூங்கா அமைக்க இடம்கொடுத்துள்ளார்களா, அல்லது அரசின் தேவைக்கு நிலம் ஒதுக்கி உள்ளார்களா என்பதை உறுதி செய்யுங்கள். பாதை 25 அடிக்கு குறையாமல் பார்த்து இடம் வாங்குங்கள். 30 அடி பாதை இருந்தால் தான் வாகனங்கள் உள்ளே வந்து செல்ல முடியும். எனவே அதனை உறுதி செய்யுங்கள்.மெயின் ரோட்டில் இருந்து மனை எவ்வளவு தூரம் உள்ளது.நீங்கள் அலுவல் செய்யும் இடம் எவ்வளவு நேரம் ஆகும் ஆகியவற்றையும் உறுதி செய்யுங்கள்.

சென்னையை பொறுத்தவரை சில விஷயங்களை பார்ப்போம். சிலர் தரமணியில் வேலையை பார்த்துக்கொண்டு திருவள்ளூரில் இடம் வாங்கி வீடு கட்டி குடியேறுவார்கள். அவ்வளவு தூரம் தினமும் பயணிப்பது எளிதானது அல்ல. அதேபோல் சிலர் செங்கல்பட்டு அருகே அதுவே 8 கிலோமீட்டர் தூரம் இருக்கும்) அங்கிருந்து ரயிலில் ஏறி தரமணியோ அல்லது வேளச்சேரியிலோ வேலை பார்க்க ரயில், பஸ் என மாறி மாறி வர வேண்டியதிருக்கும். அப்படி வந்து சென்றால் உங்கள் பயண நேரம் மிகமிக அதிகமாக இருக்கும். எனவே சென்னையின் புறநகர் பகுதியில் இடம் வாங்குகிறீர்கள் என்றால் ரயில் நிலையத்தை ஒட்டியே வாங்குங்கள். அப்படி முடியாவிட்டால் நீங்கள் வேலை செய்யும் பகுதியில் லீசுக்கு குடியிருக்கலாம். அது உங்களுக்கு இன்னமும் பல மணி நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும்.

சரி இன்னும் சில முக்கியமான விஷயங்களை பார்ப்போம். நீங்கள் வாங்கும் இடத்தின் மனைப்பிரிவு நகர், ஊரமைப்பு துறையால் முறையாக அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்யுங்கள். டி.டி.சி.பி., அங்கீகாரம் அளித்த வரைபடத்தின் பிரதியை கேட்டு வாங்கி அதில் நீங்கள் தேர்ந்தெடுத்த மனை எங்கு அமைந்துள்ளது, அதற்கு முறையான சாலை இணைப்பு எப்படி இருக்கிறது என்பதை உறுதி செய்யுங்கள்.

சில இடங்களில் ஒரு நிலத்தை பல மனைகளாக பிரித்து விற்பனை செய்யப்படுவது உண்டு. இவ்வாறு செய்யும் நபர்கள் அதில் சாலைக்கான நிலத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் தான பத்திரம் வாயிலாக முறையாக ஒப்படைத்திருக்க வேண்டும். அதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டியது உங்களின் கடமை.

சாலைக்கான நிலம் உள்ளாட்சியிடம் ஒப்படைக்காமல், பொதுவானது என்று பத்திரத்தில் குறிப்பிட்டால் அது பின்னாளில் தனியார் சாலையாக மாறிவிடும். அதேபோல் உங்கள் மனைப்பிரிவுக்கு பின்னால் உள்ள பகுதிகளுக்கு வேறு சாலை உள்ளதா அல்லது அவர்கள் எதிர்காலத்தில் இந்த சாலையை பயன்படுத்த வேண்டும் என்று உரிமை கோர வாய்ப்பு உள்ளதா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் வாங்கும் மனையில் சாலைகளின் அகலம், நீளம் தொடர்பான விஷயங்கள் சரியாக இருக்கிறதா என்பதை சர்வேயரை வைத்து அளந்து கொள்ளுங்கள். பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்றவை சரியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்யுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+