விஜயின் தவெக உடன் கூட்டணியா? மறுக்காமல் எடப்பாடி சொன்ன பதில்.. அப்போ கன்பார்மா? திருப்பம்
சென்னை: தமிழக வெற்றிக்கு கழகம் உடன் அதிமுக கூட்டணி வைக்க போவதாக செய்திகள் வரும் நிலையில், அது தொடர்பான கேள்விக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?

இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.
அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழக வெற்றிக்கழகம் வருகிறதா?
அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சி ஒன்று வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. விஜயைத்தான் எடப்பாடி பழனிசாமி இப்படி குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணிக்குள் விஜயை கொண்டு வருவதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவிட்டதாக செய்திகள் உலவ தொடங்கி உள்ளன. விஜயை தன் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயல்வதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் இளைஞர்கள் இல்லை. அதிமுக தலைவர்கள் பெரும்பாலும் சீனியர்கள். இதனால் இளைஞர்களும் பெரும்பாலும் அதிமுகவை கண்டுகொள்வது இல்லை. இதன் காரணமாக இளைஞர்கள் ஆதரவு கொண்ட கட்சி கூட்டணி தேவை. தமிழக வெற்றிக் கழகத்திடம் பெரிய இளைஞர் பட்டாளம் உள்ளது. முக்கியமாக முதல் தலைமுறை வாக்காளர்கள் நிறைய பேர் விஜய் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. இவர்களை பிடித்தால் திமுகவிற்கு செக் வைக்க முடியும். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தை இழுக்க எடப்பாடி திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி சொன்ன சீக்ரெட்
இந்த நிலையில் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, திமுகவை வீழ்த்தவே பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளோம். அதிமுக தலைமையில்தான் தனித்த ஆட்சி அமைப்போம். மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் கூட்டணி ஆட்சி அமைப்போமா என்று கேட்கிறீர்கள்.. ஆனால் யுகங்களுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க போகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி.. தேர்தல் தொடர்பாக சில திட்டங்களை வகுப்போம். அந்த யுக்தி, வியூகங்களை எல்லாம் வெளியே சொல்ல முடியாது. அதே சமயம் நீங்கள் விஜய் இறங்கி வந்தால்.. பாஜக கூட்டணியை உடைத்துவிட்டு விஜயுடன் செல்வீர்களா என்று கேட்கிறீர்கள். அது யுகம். யுகத்திற்கு எல்லாம் இப்போதைக்கு பதில் சொல்ல முடியாது.
ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு பலம் உள்ளது. பாஜகவிற்கு ஒரு பலம் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சிகளுக்கு ஒரு பலம் உள்ளது. அதன் அடிப்படையிலேயே செயல்பட முடியும் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications