பிஎஃப் பணம் .. இனி கிளைம் ரிஜெக்ட் ஆகாது.. 2 முடிச்சுகளை அவிழ்த்து மத்திய அரசு குட் நியூஸ்
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான இபிஎப்ஓவில் பணம் (pf money withdrawal) எடுக்க முயற்சி செய்யும் பலருக்கும் ரிஜெக்ட் ஆகும்.. அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு தான்.. அந்த இரண்டு சிக்கலையும் மத்திய அரசு களைந்துள்ளது. இதன் காரணமாக கிளைம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறைந்துவிடும். பலருக்கும் ஒரே முயற்சியில் பிஎஃப் பணம் எளிதாக கிடைக்கும்.. மத்திய அரசு அப்படி என்ன செய்திருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இ.பி.எப்.ஓ. எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் ஆகும். இந்த திட்டப்படி ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு அல்லது வேலையை விட்டு வெளியேறும் போது கிடைக்கும் சட்டப்பூர்வ பணபலன் உரிமையாகும். ஒருவேளை ஊழியர்கள் இறந்து போனால், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு பலன் கிடைக்கும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் (EPFO திட்டம்) கீழ் முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் கணிசமான நிதியினை மாதம் மாதம் பங்களிப்பு தொகையை செலுத்த வேண்டும். அந்தத் தொகையில் பெறப்படும் வட்டியானது, உறுப்பினரின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் (PF கணக்கு) வரவு வைக்கப்படும். பின்னர் பணியாளருக்கு ஓய்வு பெறும் போது அல்லது வேலையை விட்டு வெளியேறும் போது அந்த தொகை கிடைக்கும். அதேபோல் ஓய்வூதியமும் கிடைக்கும்.
ஒருவருக்கு 58 வயதை அடைந்தவுடன் பிஎப் பங்களிப்பில் உள்ள முழு தொகைகளையும் திரும்பப் பெறலாம் அல்லது பணியில் இருந்து ஓய்வு பெறும் போது பணியாளர் முழுமையான செட்டில்மென்ட் கோரி விண்ணப்பிக்க முடியும். அதேநேரம் ஊழியர் 2 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் பிஎப் பணத்தை முழுமையாக எடுக்க முடியும். இதேபோல் ஓய்வு பெறும் வயதை அடைவதற்கு முன் பணியில் இருக்கும் போது மரணம் ஏற்பட்டால், சட்டப்பூர்வ வாரிசுகள் அல்லது நாமினிக்கு முழுமையான செட்டில்மென்ட் வாங்க முடியும்.
அதேநேரம் மருத்துவ காரணங்கள் மற்றும் வீடு கட்ட, திருமணம் மற்றும் அவசர தேவைகளுக்கு பிஃஎப் கணக்கில் அட்வான்ஸ் பணம் எடுக்க முடியும். அதற்கு ஏற்கனவே உள்ள பழைய நிறுவனத்தின் பிஃஎப் கணக்கில் இருந்து புதிய பிஃஎப் கணக்கிற்கு பணத்தை மாற்ற வேண்டும் , அத்துடன் கண்டிப்பாக நிறைய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பெயர் சரியாக இருக்க வேண்டும். பான் கார்டில் உள்ள பெயரும் ஆதார் கார்டில் உள்ள பெயரும் சரியாக இருக்க வேண்டும். கண்டிப்பாக பான் கார்டில் பெயரை மாற்ற முடியாது. ஆதாரில் தான் மாற்ற வேண்டும். அதாவது உங்கள் பெயர் பிஃஎப் கணக்கில் என்ன பெயர் மற்றும் இன்சியலுடன் இருக்கிறதோ அதேபோல் தான் பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு என எல்லாவற்றிலும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணத்தை எடுக்க இயலாது என்பதே யதார்த்தம்.
அடுத்ததாக பிஎப் அக்கவுண்டை பொறுத்தவரை இப்போது நடப்பு நிறுவன கணக்கில் தான் அனைத்து பணமும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பணம் எடுக்க முடியும். பிஎஃப் கிளைம் செய்வோருக்கு பெரும்பாலும் நிராகரிக்க காரணம், வங்கி காசோலையை இணைக்காதது அல்லது வங்கி பாஸ்புக் பக்கத்தை இணைக்காதது காரணமாக இருக்கும். அதாவது உங்கள் பெயரில் உள்ள செக் லீப் அல்லது பாஸ்புக்கை காட்டாவிட்டால் பணம் கிடைக்காது.. நிராகரிக்கப்படும். இந்த செயல்முறைதெரியாமல் பலர் பிஎஃப் பணத்தை எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல செய்தியை மத்திய அரசு கூறியுள்ளது.
தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "வருங்கால வைப்பு நிதியில் (இபிஎப்ஓ) பணம் எடுக்க ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது வங்கி பாஸ்புக் படத்தை இணைக்க வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது உரிமைகோரல் தீர்வு செயல்முறையை கணிசமாக முறைப்படுத்தும் மற்றும் பிஎப் உரிமைகோரல் நிராகரிப்புகள் தொடர்பான குறைகளை வெகுவாக குறைக்கும்.
கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதியில் சோதனை திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 1.7கோடி இபிஎப் உறுப்பினர்கள் பயன்பெற்றுள்ளனர். மோசமான அல்லது படிக்க முடியாத பதிவேற்றங்கள் மூலமாக உரிமைகோரல் நிராகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது " இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications