PCOS பிரச்சினை இருக்கா.. பிசிஓஎஸ் உள்ள பெண்கள் இதை முயன்று பார்க்கலாம்.. எளிய தீர்வுகள் இதோ
சென்னை: பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வலி அதிகமாக இருக்கும். அதை சில எளிதான முறைகளைக் கடைப்பிடித்து வலியைக் குறைக்கலாம்.
மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களுக்குக் கருப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுகிறது. முதலில் வெகு சில பெண்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த பாதிப்பு, இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது.
பிசிஓஎஸ் எனப்படும் இந்த பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமை உரியச் சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணப்படுத்த முடியும். கருப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளை மருத்துவர்கள் ஆலோசனையைக் கேட்டு, சிகிச்சை பெற்றால் குணப்படுத்த முடியும்.

மாதவிடாய் வலி
பொதுவாகவே மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக வலி ஏற்படும். அதிலும் குளிர்காலத்தில் மாதவிடாய் வலி தீவிரமாகவே இருக்கும்.. பருவநிலை எவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதைப் பெண்கள் எளிதாக உணர முடியும். அதிலும் பிசிஓஎஸ் பிரச்சினை உள்ள பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வலி மிகவும் அதிகமாகவே இருக்கும். அவர்களுக்கு மாதவிடாய் காலம் என்பது நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு வேதனையாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக, இந்த நாட்களில் இந்தியாவில் பிசிஓஎஸ் அதிகம் ஏற்படுகிறது. ஐந்தில் ஒரு பெண் இந்த பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள்.

சூடான நீர்
அந்த 20 சதவீதம் பேரில் நீங்கள் இருந்தால்.. அல்லது இதைப் படிக்கும் ஆண்களின் வீட்டில் இருந்தால்.. மாதவிடாய் காலத்தில் அவர்களின் வலியைக் குறைக்க சில எளிய முறைகள் உள்ளன. அதைப் பின்பற்றலாம். சூடான நீர் நிறைந்த பையைப் பயன்படுத்தலாம்.. மாதவிடாய் காலத்தில் உடலில் வலி அல்லது பிடிப்பு ஏற்பட்டால் அதைக் குறைக்க இது பொதுவான வழியாக உள்ளது. அடிவயிற்று அல்லது முதுகு என எங்கு வலி அதிகம் உள்ளதோ.. அங்கு சில நிமிடங்கள் நீர் நிறைந்த பையை வைக்கவும். அதிக நேரம் வைத்தால் தீக்காயம் ஏற்படும் அபாயம் உள்ளதால்.. நீண்ட நேரம் வைக்க வேண்டாம்.. .அதேபோல நீர் பேக்கை அழுத்தினால்.. அது உடையும் அபாயம் உள்ளதால் அப்படிச் செய்ய வேண்டாம்.

வெந்தயம்
அடுத்து வெந்தயத்தைப் பயன்படுத்தலாம்.. வலிநிவாரணி மருந்தைப் பயன்படுத்துவதில் விருப்பம் இல்லையென்றால், மாதவிடாய் வலிகள் குறைக்க நீரில் வெந்தயத்தை ஊற வைத்து அதைச் சாப்பிட வேண்டும்.. இதன் மூலம் கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யும். இதனால் உடல் பருமன் ஏற்படுவதும் தடுக்கப்படும்.. எடை அதிகரிப்புடன் பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு நீரிழிவு ஏற்படும் அபாயத்தையும் இது குறைக்கவும் இவை உதவும்.

துளசி டீ
துளசி டீ குடிக்கலாம்.. மாதவிடாய் வலி உங்களுக்குத் தாங்க முடியாததாக இருந்தால், துளசி டீ குடிக்கலாம்.. துளிசி ஆண்ட்ரோஜன்களைக் கட்டுப்படுத்தும் அதே நேரம் இன்சுலின் அளவையும் ஒழுங்குபடுத்துகிறது.. பிசிஓஎஸ் இருக்கும் பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது, முகப்பரு மற்றும் மாதவிடாய் வலியைக் கட்டுப்படுத்த இது உதவும். துளசி டீ பிடிக்கவில்லை என்றால், சாதாரண நீரில் துளிசியை கொதிக்க வைத்து அதைத் தொடர்ந்து குடிக்கலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு
பெரும்பாலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை இழப்பை வேகமாக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.. சூடான எலுமிச்சை நீரைத் தேன் கலந்து குடித்தால் இது மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும். இதய நோய்கள், மூட்டுவலி மற்றும் நீரிழிவு நோய்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

நெல்லிக்காய்
நமது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க நெல்லிக்காய் சிறந்த தீர்வாகும்.. இது பெண்களின் கருவுறுதலை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் இது எடையைக் குறைக்கவும் உதவும்.. மேலும், முன்கூட்டியே முடி நரைப்பதைத் தடுக்கும் . அதன் சாறு பிசிஓஎஸ் மற்றும் தீவிர மாதவிடாய் வலியைக் குறைக்கும்.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications