சென்னையில் லீசுக்கோ, வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ வீடு தேடுறீங்களா.. இன்று போய் உடனே பாருங்க
சென்னை: சென்னையில் வாடகைக்கு, குத்தகைக்கு அல்லது வாடகைக்கு வீடு தேடுகிறீர்களா? சொந்தமாக வீடு வாங்க விரும்புகிறீர்களா? இன்று சென்று அந்த இடத்தைப் பாருங்கள். அங்கு தண்ணீர் தேங்கியுள்ளதா, வெள்ள வடிகால் சரியாக உள்ளதா, சாலைகள் எப்படி உள்ளது ஆகியவற்றை பார்க்கலாம்.
வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 16 செமீ மழை பதிவாகி உள்ளது. மீனம்பாக்கம் என்று எடுத்துக்கொண்டால், தென்சென்னை பகுதிகள் மற்றும் தாம்பரம் பகுதிகளை உள்ளடக்கியதாகும். இங்கு இன்று அதிகாலை இடி மின்னலுடன் மிக கனமழை பெய்தது.
இப்படி ஒரு மழை, கடந்த 1996ம் ஆண்டு பெய்தது. அப்போதும் ஒரே நாளில் 28 செமீ மழை பெய்தது. அதற்கு பிறகு தற்போது தான் முதல்முறையாக ஒரே நாளில் 16 செமீ மழை பெய்துள்ளது. சென்னை முழுவதுமே நல்ல மழை பெய்துள்ளது.
சென்னையில் சொந்தமாக வீடு வாங்க விரும்புவோர். வாடகைக்கு குடிபோக விரும்பும் ஏரியாக்கள்,லீசுக்கு போய் குடியேற விரும்புவோர் இன்று போய் அந்த பகுதியில் பாருங்கள்.

மழை நீர் தேங்கி உள்ளதா, மழை நீர் வடிகால் வசதிகள் உள்ளனவா, சாலைகள் எந்த அளவிற்கு மோசமாக உள்ளன. தண்ணீர்கள் குளம் போல் தேங்குமா, தண்ணீரால் பிரச்சனைகள் வேறுமா என்பதை பார்த்து அறிய முடியும். சென்னையில் பல்வேறு பகுதிகளில் சிறிய மழைக்கே சாலைகள் வெள்ளம் போல் தேங்கிவிடும்.
இதற்கு காரணம் மழை நீர்வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தான் காரணம். சில பகுதிகளில் தண்ணீர் போவதற்கு வடிகால்களே இருக்காது. மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இப்போதுதான் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மழைநீருக்கு பள்ளமான பகுதிகள் மூழ்கும் எனவே சொந்த வீடு வாங்குவோர், வீடு மாற விரும்புவோர், இதுபோன்ற மழை காலங்களில் பார்த்தால் அந்த பகுதியின் நிலையை அறிந்து கொள்ள முடியும்.
அதேநேரம் தண்ணீரால் பிரச்சனை ஒருபுறம் எனில், தண்ணீர் வராமல் பிரச்சனை உள்ள ஏரியாக்களும் உள்ளன. பள்ளமான பகுதிகளில் வெள்ளக்காலங்களில் தண்ணீர் தேங்கும் என்றால், வெயில் காலங்களில் தண்ணீர் போர்வெல்களில் பிரச்சனை குறைவாக இருக்கும். ஆனால் மேட்டுப்பகுதிகளில் தண்ணீர் மழை காலங்களில் பிரச்சனை இருக்காது. ஆனால் வெயில் காலங்களில் போர்வெல்களில் தண்ணீரே வராது. இதனால் இதையும் வீடு வாங்குவோர் பார்த்துக்கொள்ளுங்கள்.
சென்னைக்கு தண்ணீரில் தான் கண்டம். சென்னையில் தண்ணீர் அதிகமாக வந்தாலும் பிரச்சனை, வராமல் போனாலும் பெரும் பிரச்சனை தான். காரணம் சென்னையில் உள்ள மக்கள் நெருக்கம் தான். பல ஏரிக்களும் குளங்களும் வீடுகள் கட்டுவதற்காக பாரபாட்சமே இல்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டன.
இதனால் பல பகுதிகளில் மழை நீர் வடிகால்களும் ஆக்கிரமிக்கப்பட்டன. அதன் விளைவுகள் மழை காலங்களில் மட்டுமே தெரியும். எனவே சொந்தமாக வீடு வாங்க விரும்புவோர் மழை காலங்களில் அந்த ஏரியாவிற்கு சென்று உண்மை நிலையை அறிந்து செயல்படுங்கள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications