Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்திரப்பதிவு பண்ண போறீங்களா? ஆன்லைனில் சொத்து பதிவு செய்ய முடியாது.. தமிழக பதிவுத்துறை சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை, அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் ஆகியவற்றை பதிவு செய்ய மக்கள் பணம் செலுத்தி முத்திரைத்தாள் வாங்குவார்கள். முத்திரைத்தாள் கட்டணம் மூலமாகவே அரசின் கருவூலத்துக்குத் தேவையான அதிக வரி வருவாய் கிடைத்து வருகிறது.. இந்நிலையில், தமிழக பதிவுத்துறை முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

தமிழகத்தில் சார்-பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் நேரடியாக சார்-பதிவாளர்களை அணுக முடியாத நிலை நிலவுகிறது. இதனால் வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட பணிகளுக்கு ஆவண எழுத்தர்களை நாட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது...

Tamil Nadu Registration Department Property Registration Tamil Nadu Online Property Registration Sub Registrar Office Tamil Nadu

குறிப்பாக சார்-பதிவாளர்களுக்கு தெரிந்த ஆவண எழுத்தர்கள் வழியாக வரும் பத்திரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது.. இதனால் பெரும்பாலான மக்கள் அனைத்து பணிகளுக்கும் எழுத்தர்களை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் விதிகளின்படி பொதுமக்கள் நேரடியாக பத்திரங்களை தாக்கல் செய்ய அனுமதி உள்ளது.

நிராகரித்தால் புகார்

இந்த நடைமுறை சரியாக பின்பற்றப்படவில்லை என பதிவுத்துறைக்கு புகார்கள் வந்தது... அதாவது பதிவுத்துறையின் ஆன்லைன் தளத்தில் பொதுமக்களுக்கான தனி நுழைவு வசதி உள்ள நிலையில், அதில் பத்திர விவரங்களை பதிவு செய்தால் டோக்கன் ஒதுக்கப்படும்.

எனவே கட்டணம் செலுத்தி நேரடியாக சார்-பதிவாளரிடம் பத்திரம் தாக்கல் செய்யலாம்... உரிய காரணமின்றி நிராகரித்தால் புகார் அளிக்கலாம்; தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை கடிவாளத்தை சில நாட்களுக்கு முன்பு பிறப்பித்திருந்தது நினைவிருக்கலாம்.

தமிழக பதிவுத்துறை

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக பத்திரப்பதிவு பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மாநில பதிவுத்துறையின் மைய தரவு சேமிப்பு சர்வர் வன்பொருளில் ஜனவரி மூன்றாம் தேதி ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறே இதற்குக் காரணமாகும்.

இதனால் ஆன்லைன் ஆவண தாக்கல், வில்லங்கச் சான்றிதழ், சொத்துப் பரிமாற்ற பதிவு உள்ளிட்ட அனைத்து இணைய சேவைகளும் முடங்கின. பல மாவட்டங்களில் தொலைதூரத்திலிருந்து வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்...

கோளாறை சரிசெய்ய பதிவுத்துறையின் உயர்மட்ட தொழில்நுட்ப குழுவினர் கடந்த 48 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்... தற்போது சீரமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் சில தொழில்நுட்ப சிக்கல்கள் நீடிக்கின்றன.. இதன் காரணமாக, பத்திரப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளை சற்று தள்ளிவைக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு - சொத்துகள்

கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு சேவைகள் முழுமையாக தொடங்கப்படும் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, அவசர தேவைகளுக்காக அலுவலகங்களை அணுகியவர்களுக்கு தற்காலிக விளக்கங்கள் வழங்கப்பட்டதாகவும் மாற்று ஏற்பாடுகள் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேவை பாதிப்பு காரணமாக நிலம் வாங்கும் விற்பனை ஒப்பந்தங்கள் பல இடங்களில் தாமதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... சீரமைப்பு முடிந்ததும் அனைத்து அலுவலகங்களிலும் வழக்கமான நேரத்தில் பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது... மக்கள் அமைதியாக இருந்து அறிவிப்புகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது... இது தற்காலிக சிக்கலாகும் விரைவில் தீரும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...

சர்வர் கோளாறு - பதிவுத்துறை தலைவர்

தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

பத்திரப்பதிவுத்துறை தகவல்களை சேகரித்து வைக்கப்படும் வன்பொருள் ஒன்றில் (ஹார்டுவேர்) தொழில்நுட்ப கோளாறு கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்டுள்ளது. இதனை கணினி மென்பொறியாளர்கள் சரி செய்து விட கடந்த இரு தினங்களாக முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

இந்த வன்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு துறையின் மென்பொருள் முறையாக இயங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்ட பத்திரப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளை எடுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+