ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்த "ஆம்ஸ்ட்ராங்"? அங்கேயே போனை போட்ட முதல்வர்.. செம டோஸ்.. பரபரத்த சென்னை
சென்னை: சென்னையையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது ஆம்ஸ்ட்ராங் படுகொலை நிகழ்வு.. இதுகுறித்த விசாரணையை போலீசார் தீவிரமாக நடத்திவரும் நிலையில், நமக்கு ஒரு பிரத்யேகமான செய்தி கிடைத்துள்ளது.
சென்னையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங்.. இந்த கொடூர கொலையை கண்டித்து, தமிழக எதிர்க்கட்சிகள், திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்..

கோரிக்கை: இந்த கொலை தொடர்பான விசாரணையை சென்னை போலீசார் விசாரித்து வருகிறார்கள் என்றாலும், சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியே கோரிக்கை விடுத்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காவல்துறை மற்றும் உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம் என்றும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழக அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என்றும் கொந்தளித்து கூறியிருக்கிறது.
நிஜ குற்றவாளிகள்: அதுமட்டுமல்ல, இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அக்கட்சி விடுத்துள்ளது.
"இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது... வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் வெளியிட்டிருக்கிறார்.
கேள்விகள்: எனினும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, என ஒட்டுமொத்த கட்சிகளுமே கண்டனம் தெரிவித்துள்ளன.. தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் விடாமல் கேள்விகளை துளைத்தெடுத்து கொண்டிருக்கின்றன..
இப்படிப்பட்ட சூழலில், நமக்கு ஒரு பிரத்யேகமான செய்தி கிடைத்துள்ளது.. அதாவது, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம், முதல்வர் ஸ்டாலினை தூங்கவிடவில்லையாம். காரணம், அரசியல் கட்சி தலைவர்கள் குறி வைக்கப்படுவதாக அவர் நினைக்கிறாராம்.
உளவுத்துறை: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலையை தொடர்ந்து பகுஜன் சமாஜ் பார்டி லீடர் படுகொலை நடந்திருப்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லையாம். மாநில உளவுத்துறையின் உயரதிகாரியை தொடர்பு கொண்டு கடினமான வார்த்தைகளால் கோபப்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
"நீங்கள் என்ன தான் செஞ்சிக்கிட்டு இருக்கீங்க? க்ரைம் மீட் பார்க்கும் உங்க ஆட்களுக்கு சோர்ஸ் இருக்கிறதா? இல்லையா? சென்னை சிட்டி I.S என்ன பண்ணிக்கிட்டு இருக்கு? ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உங்களால் ஏன் ஸ்மெல் பண்ண முடியவில்லை? உளவுத்துறை செயலிழந்துடுச்சுன்னு எல்லோரும் கூப்பாடு போடப்போறாங்க. என்ன பதில் சொல்வீங்க?" என்றெல்லாம் கடிந்து கொண்டாராம்.
ரிப்போர்ட் குடுங்க: அதுமட்டுமல்ல, "இந்த சம்பவம் குறித்து ரிப்போர்ட் கொடுங்க" என்று சொல்லி கோபமாக போன் லைனை துண்டித்துக் கொண்டாராம் ஸ்டாலின்.
"
சமீபத்தில்தான், சென்னை பெருநகர உளவுத்துறையின் முக்கிய அதிகாரி அரவிந்தனை இடமாற்றினார்கள். அந்த நடவடிக்கை நடந்து சில நாட்களிலேயே இந்த படுகொலை நடந்திருப்பது உளவுத்துறையினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு மாயாவதி விசாரித்ததாகவும், குற்றவாளிகளை 4 மணி நேரத்தில் கைது செய்திருக்கிறோம் என்று ஸ்டாலின் சொன்னதாகவும் ஒரு தகவல் உளவுத்துறை தரப்பில் எதிரொலிக்கிறது.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி உட்பட எதிர்கட்சித் தலைவர்கள், ஆளும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்..
திருமா கோரிக்கை: இதில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது சரணடைந்து இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களை தூண்டி விட்டவர்களை கைது செய்யப்பட வேண்டும். சரண் அடைந்தவர்களை கைது செய்து விட்டோம் என்ற அடிப்படையில் புலன் விசாரணை நிறுத்தி விடக்கூடாது" என்று கேட்டுக் கொண்டுள்ளது பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications