Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் துள்ளிய நாகேந்திரன்.. இன்று சென்னை கோர்ட்டில் ஆஜர்.. ஆம்ஸ்ட்ராங் கேஸில் உண்மைகள் வெளிவருமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்ஸ்ட்ராங் வழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த கொலையில் தொடர்புடையவர்களிடம் விசாரணைகளும் தீவிரமாகி வருகின்றன.. அந்தவகையில், ரவுடி நாகேந்திரனை பலத்த பாதுகாப்புடன் இன்று நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ந் தேதியன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பழிவாங்கவே, ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக காரணம் சொல்லப்பட்டு வருகிறது.

Vellore Nagendran Armstrong

படுகொலை: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்... அதேபோல, இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக கைதாகி வருகிறார்கள். இதில், திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளை சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், வக்கீல்கள், ரவுடிகள் என பலதரப்பட்டவர்கள் வரிசையாக சிக்கி வருவதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டவாறே உள்ளது..

பின்னணி என்ன? இந்த வழக்கில் மட்டும் இதுவரை 23 பேர் கைதாகி உள்ளனர். எனினும், இந்த கொலைக்கான காரணம் என்ன? மூளையாக செயல்பட்டவர்கள் யார்? பின்னணி என்ன? என்பது பற்றியெல்லாம் இன்னும் முழுமையாக தெரியவில்லை.

எனவேதான், இந்த வழக்கில், இதுவரை கைதாகியிருப்பவர்களை, ஒவ்வொருவராக போலீசார் காவலில் எடுத்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், அஸ்வத்தாமனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமன், சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரவுடி நாகேந்திரன் என்பவரின் மகன் ஆவார்..

தனிப்படை: இவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் சதி திட்டம் தீட்டியதும், கொலையாளிகளுக்கு பண உதவி செய்ததும் தெரியவந்தது. எனவே, அஸ்வத்தாமனை காவலில் எடுத்து விசாரித்தால் நிறைய தகவல்கள் வெளியாகும் என்று தனிப்படை போலீசார் கருதினார்கள்.. இதற்காக வேண்டி எழும்பூர் நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதன்படியே, நேற்றைய தினம் எழும்பூர் கோர்ட்டில் அஸ்வத்தாமனை போலீஸார் ஆஜர்படுத்தினார்கள்.. அப்போது முக்கிய குற்றவாளியாக கருதப்படுவதால், அஸ்வத்தாமனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால் 4 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிலப்பிரச்சனை: இதையடுத்து, இன்று முதல் அஸ்வத்தாமனிடம் விசாரணை துவங்கும் என்று தெரிகிறது.. காரணம், பல கோடி ரூபாய் மதிப்புடைய நிலப்பிரச்சனையிலும், பார் கவுன்சில் தேர்தலிலும் அஸ்வத்தாமனுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே பகை இருந்து வந்ததாம்.. அத்துடன், தேடப்பட்டும் வரும் முக்கிய குற்றவாளியான ரவுடி சம்போ செந்திலுடன், அஸ்வத்தாமனும் தொடர்பில் இருந்திருக்கிறார்.

எனவே, போலீஸ் காவலின்போது, பல்வேறு தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதையடுத்து, உடனடியாக அஸ்வத்தாமனிடம் போலீசார் துருவித்துருவி விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்களாம்.

இந்நிலையில், ஏற்கனவே கைதாகி வேலூர் சிறையிலுள்ள அஸ்வத்தாமனின் அப்பா நாகேந்திரனின் காவல் இன்றுடன் முடிவடைகிறது.. எனவே, செம்பியம் போலீசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த உள்ளனர்.. இதற்காக வேலூர் சிறையிலிருந்து ரவுடி நாகேந்திரனை பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

பரபரப்பு: செம்பியம் போலீசார், நீதிபதி முன்பு நாகேந்திரனை இன்று ஆஜர்படுத்தி போலீஸ் காவலையும் கேட்க உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நாகேந்திரனிடமும் விசாரணை ஆரம்பமாகும் என தெரிகிறது. நாகேந்திரன், அஸ்வத்தாமன் இருவருமே முக்கிய நபர்கள் என்பதால், இவர்களிடம் விசாரணை நடத்தும்போது பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, வேலூர் ஜெயிலிலிருந்த நாகேந்திரனிடம், கைது செய்யப்பட்டதற்கான ஆவணத்தை போலீசார் வழங்க முயன்றிருக்கிறார்கள்.. அப்போது தனக்கும் இந்த கொலைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை.. எதுக்காக என்னை வழக்கில் சேர்த்திருக்கிறீர்கள்? என்று ஆவணத்தை வாங்காமலேயே போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், எதையும் கண்டுகொள்ளாத போலீசார், அந்த ஆவணத்தை நாகேந்திரன் உள்ள ரூமுக்கு முன்பே ஒட்டிவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+