கொலையாளிகளை உடனடியாக கைது பண்ணுங்க.. சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள்
சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், பைக்குகளில் வந்த மர்ம கும்பலால் இன்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகளை கைது செய்யக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியினர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதான இவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவை சேர்ந்தவர். அங்கு புதிதாக வீடு கட்டி வருவதால் தற்காலிகமாக சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

தினமும் இரவு பெரம்பூரில் புதிதாக கட்டி வரும் வீடு அருகே கட்சிக் காரர்களுடன் பேசுவது வழக்கமாம். அந்த வகையில், இன்று இரவு 7 மணியளவில் வழக்கம் போல நண்பர்களுடன் ஆம்ஸ்ட்ராங்க் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, 3 பைக்குகளில் வந்த 6 பேர் கண் இமைக்கும் நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.
ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். அவருடன் இருந்த அவரது நண்பர்கள் கொலையாளிகளை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அதற்குள் கொலையாளிகள் 6 பேரும் தப்பி சென்றுவிட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ராங்கை ஆம்புலனசில் ஏற்றி ஆயிரம் விளக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை நடந்த இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களும், ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.
கொலையாளிகள் 6 பேரும் உணவு டெலிவரி ஊழியர்கள் அணியும் கலர் டி-சர்டுகளை அணிந்து வந்துள்ளனர். 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இதனிடையே குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ராஜீவ் காந்தி மருத்துவமனை எதிரே ஆம்ஸ்ட்ராங்க் ஆதராவளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏறப்பட்டது. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்ப்ட்டது. கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷம் இட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 200 பேர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications