80,000 - 1 லட்சம் சேர்கள் காலி! நொறுக்கி எடுத்த தவெக வாரியர்ஸ்! கலங்கி நின்ற இருக்கை ஒப்பந்ததாரர்கள்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் சுமார் 80,000 முதல் 1 லட்சம் நாற்காலிகள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மாநாட்டிற்கு நாற்காலிகளை வழங்கிய ஒப்பந்ததாரர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தவெக மாநாட்டில் உடைக்கப்பட்ட சேர்கள்
மதுரை பாரபத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்காக மூன்று லட்சத்திற்கும் அதிகமான நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாநாடு முடிந்த நிலையில், இந்த நாற்காலிகளில் கணிசமானவை சேதமடைந்துள்ளன. திண்டுக்கல் மற்றும் மதுரையைச் சேர்ந்த நாற்காலி ஒப்பந்ததாரர்கள் இந்த இழப்பினால் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாநாட்டுத் திடல் நிறைவடைந்த பிறகு அலங்கோலமாக காட்சியளித்த புகைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தவெக தொண்டர்கள் நாற்காலிகள் மற்றும் தடுப்புகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும், பல நாற்காலிகள் திருடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கலங்கி நிற்கும் நாற்காலி ஒப்பந்ததாரர்கள்
கூட்டமாக நாற்காலிகளை எடுத்துச் சென்றதாகவும், சிலர் தங்களது வீடுகளுக்கே கொண்டு சென்றதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பல நாற்காலிகள் முழுவதுமாக பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சேதமடையாத நாற்காலிகளை மட்டுமே ஒப்பந்ததாரர்கள் மீண்டும் எடுத்துச் சென்றுள்ளனர். மற்றவை மாநாட்டுத் திடலிலேயே விட்டுச் செல்லப்பட்டன. இந்த மாநாட்டின் காரணமாக ஏற்பட்ட 80,000க்கும் அதிகமான நாற்காலிகள் சேதம், திண்டுக்கல் மற்றும் மதுரை ஒப்பந்ததாரர்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் பேச்சு
நேற்று தவெக மாநாட்டில் விஜய் தனது பேச்சில், சிங்கம் எப்போதும் தனித்துவமானது - சிங்கம் கர்ஜித்தால் எல்லா திசையும் அதிரும். சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. சிங்கம் தன்னைவிட பெரிய எதிரியைத்தான் மோதி வீழ்த்தும். சிங்கம் தனியாவும் வரும், கூட்டமாகவும் வரும், தனியா வந்தாலும் சிங்கம்தான் ராஜா. அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தால் மட்டும்தான் இருக்கிறார் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். இந்தக் கூட்டம் வெறும் ஓட்டாக மட்டும் இல்லாமல் வரப்போகும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சிக்கு நாம் வைக்கப்போகும் வேட்டா, நம்மை கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டா இருக்கப்போகிறது.
என்னுடைய அண்ணன் புரட்சி தலைவர் விஜயகாந்த் உடன் பழகி இருக்கிறேன், அவரும் இந்த மதுரையை சேர்ந்தவர்தான், அவரை மறக்க முடியுமா. தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம், எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்துள்ளோம். சினிமாவிலும் அரசியலிலும் என் தலைவர் எம்ஜிஆர்; எம்ஜிஆர் போன்ற குணம் கொண்டவர் அண்ணன் விஜயகாந்த்
நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள், இப்போ பாருங்க, என் கூட இருப்பவர்களே நான் வர மாட்டேன் என்றார்கள், நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரலை , விஜய் எப்படி வருவார் என்று சொன்னார்கள், நான் வந்துவிட்டேன். அவர் வரவில்லை அதனால் நீங்கள் வர மாட்டீர்கள் என்றார்கள்.. இதோ வந்துவிட்டேன் என்று விஜய் பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications