தவெக நடத்திய நோன்பு நிகழ்ச்சி.. ரூ.1 லட்சம் பணத்தை பறிகொடுத்த 2 பேர்.. விஜய் முன்பே நடந்த சம்பவம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமது இஸ்மாயில் என்பவரிடம் இருந்து ரூ.63 ஆயிரமும், முகமது அபுதாஹீர் என்பவரிடம் இருந்து ரூ.42 ஆயிரமும் பணம் திருடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ரமலான் மாதத்தையொட்டி இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நேற்று ஒய்எம்சிஏ மைதானத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தவெக சார்பாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 5 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல் இஸ்லாமியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் மொத்தமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி கட்சி நிகழ்ச்சியாக இருக்கக் கூடாது என்பதற்காக தவெக கட்சி கொடி கூட உள் அரங்கில் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் தவெக தலைவர் விஜய் குல்லா மற்றும் கைலி அணிந்து இஸ்லாமியர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதில் நடிகர் விஜயை பார்ப்பதற்காக அதிகளவிலான ரசிகர்கள் கூடினர். பலரும் அனுமதி அட்டை இல்லாமலேயே தடுப்புகளை கடந்து உள்ளே புகுந்தனர். இதனால் ஒய்எம்சிஏ மைதான நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கதவு உடைந்தது. ஒரு கட்டத்தில் பவுன்சர்களால் கூட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் துவண்டு போயினர்.
இந்த நிலையில் தவெக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சுமார் ரூ.1 லட்சம் வரை திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மொத்தமாக 3 பேரிடம் இருந்து சுமார் ரூ.1 லட்சம் வரை பணம் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முகமது இஸ்மாயில் மற்றும் அப்துல் அபுதாஹீர் ஆகியோரிடம் இருந்து ரூ.63 ஆயிரமும், ரூ.42 ஆயிரமும் திருடப்பட்டுள்ளது. இதன்பின் பணத்தை பறிகொடுத்த இருவரும் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications