உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்... வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டன
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதற்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் வார்டு மறுவரையறை என பல்வேறு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்து உள்ளது. அதன்படி உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் சிறப்பு ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் அதிகாரிகளுடன் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வார்டு மறு வரையறை செய்யப்பட்டது மற்றும் மாநகராட்சி பகுதியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட வார்டு மறுவரையறை மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் மொத்த வாக்காளர் பட்டியல், இறுதி வாக்காளர் பட்டியல் என அனைத்து தகவல்களையும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம், ஆட்சியர் ராசாமணி வழங்கினார்.
இதே போல், சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களுக்கும் சேர்த்து 5,800 வாக்குசாவடிகள் அமைக்கவுள்ளன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்திய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், வாக்குசாவடிகள் குறித்து அறிக்கை பெற்றுள்ளார்.
அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களுக்கும் சேர்த்து 5,800 வாக்குசாவடிகள் அமைக்கவுள்ளனர்.
மேலும், வாக்காளர் பட்டியலை பொருத்தவரையில், மக்களவைத் தேர்தலுக்கான சென்னை வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு புதிய வாக்காளர்களையும் இணைக்கும் நோக்கில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதே சமயம், சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 200 வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications