"என்னை கைது செய்ய உத்தரவு என்பது வதந்தி.. யாரும் பரப்ப வேண்டாம்”.. இயக்குநர் லிங்குசாமி விளக்கம்!
சென்னை: தன்னை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக பரவி வருவது வதந்தி என இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார். செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளதாக இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் இயக்குநர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை செக் மோசடி வழக்கில் குற்றவாளி என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இயக்குநர் லிங்குசாமி கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.35 லட்சம் பணத்தை பேஸ்மேன் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றுள்ளார். இந்த கடனை லிங்குசாமி திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடனை வட்டியுடன் ரூ.48.68 லட்சத்தை செலுத்துமாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது. பேஸ்மேன் நிறுவனத்தின் இயக்குநர் ராகுல் குமார் சார்பில், கடன் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து 48 லட்சம் ரூபாய் தர வேண்டும் என இயக்குநர் லிங்குசாமி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, 48 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை லிங்குசாமி வழங்கினார். ஆனால், அந்த காசோலைகள், வங்கிக் கணக்கில் பணம் இல்லை என திரும்ப வந்து விட்டன. அதனால், காசோலை மோசடி வழக்கில் ராகுல் குமார், சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு தொடர்ந்து வந்ததது. இந்நிலையில் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் இயக்குநர் சுபாஷ் சந்திர போஸ் குற்றவாளி என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருவருக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், கடன் தொகையை வட்டியுடன் சேர்ந்து 48 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை பேஸ்மேன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். கடனை கொடுக்க தவறினால் மேலும் 2 மாதங்கள் இருவரும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
— Lingusamy (@dirlingusamy) December 19, 2025
இந்நிலையில் இது குறித்து இயக்குநர் லிங்குசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காசோலை வழக்கில் நீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளனர். நாங்கள் மேல்முறையீடு செய்ய 30 நாள் கால அவகாசம் வழங்கி உள்ளனர். நாங்கள் இதை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள். எங்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை” எனத் தெரிவித்துள்ளார்.
-
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications