‛‛உல்லாசம்’’.. பள்ளி மாணவிகள் 2 பேரை கடத்தி அதுவும் ஒரே வீட்டில்.. திருமணத்தை மறைத்து ஏமாற்றிய ரவுடி
சென்னை: கன்னியாகுமரியை சேர்ந்த ரவுடி ஒருவர் திருமணத்தை மறைத்து இன்ஸ்டாகிராமில் பழக்கமான பிளஸ் 2 மாணவி மற்றும் அவரது தோழி ஆகியோரை காதல் வலையில் வீழ்த்தி சென்னைக்கு அழைத்து சென்று ஒரே வீட்டில் உல்லாசமாக வசித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காதல் என்ற பெயரில் சிலர் சமூக வலைதள மூலம் சிறுமிகளை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விழிப்புணர்வுகள் ஏற்படுத்திய போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
இந்நிலையில் தான் கன்னியாகுமரியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது சமூக வலைதளத்தில் பழக்கமான பிளஸ் 2 மாணவி அவரது தோழி என 2 பேரை காதலித்த ரவுடி, தனது திருமணத்தை மறைத்து இருவரையும் கடத்தி சென்று குடும்பம் நடத்தி உள்ளது. அதுபற்றி விபரம் வருமாறு:

மாயமான மாணவிகள்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் புதுக்கடை பகுதியை சேர்ந்த மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். இதேபோல் திருவட்டார் பகுதியை சேர்ந்த மாணவியும் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி இவர்கள் 2 பேரும் திடீரென்று மாயமாகினர். இதையடுத்து குடும்பத்தினர் இருவரையும் பள்ளி, உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் மாணவிகள் கிடைக்கவில்லை.

தனிப்படை விசாரணை
இதனால் மாணவிகள் மாயமானது பற்றி இருவரின் பெற்றோரும் போலீசில் புகார் அளித்தனர். திருவட்டார் மற்றும் மார்த்தாண்டம் போலீசில் தனித்தனியே புகார் அளிக்கப்பட்டன. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் மாணவிகளை கண்டு பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

முக்கிய தகவல்
இந்த விசாரணையின்போது சில தகவல்கள் கிடைத்தன. அதாவது மாயமான மாணவிகள் இருவரும் அதே நாளில் வேர்கிளம்பி குட்டக்குழி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. அந்த வாலிபர் பற்றி விசாரித்தபோது அவரும் வீட்டில் இருந்து மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது முக்கிய தகவலாக பார்க்கப்பட்டது. இதனால் மாணவிகள் மாயமான விஷயத்தில் அந்த நபருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

சென்னையில் சிக்கிய 3 பேர்
இதையடுத்து அந்த வாலிபரின் செல்போன் எண்ணின் சிக்னலை போலீசார் கண்காணித்தனர். செல்போன் சிக்னல் மூலம் அந்த நபர் சென்னை திருவான்மியூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் திருவான்மியூர் பகுதியில் சொகுசு பங்களாவில் பதுங்கியிருந்த வாலிபர் மற்றும் இரு பள்ளி மாணவிகளையும் கண்டுபிடித்தனர்.

திருமணமாகி 2 குழந்தைகள்
3 பேரும் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணையில் அந்த வாலிபர் குட்குழி பகுதியை சேர்ந்த 22 வயதான வினு என்பதும் ,பிளம்பர் வேலை செய்வதும் தெரியவந்தது. அதோடு கொலை வழக்கு, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 படித்த மாணவி ஒருவரை கடத்தி திருமணம் செய்த நிலையில் 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

2 மாணவிகளுடன் உல்லாசம்
மனைவி, 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் வினுவுக்கு இன்ஸ்டகிராம் மூலம் புதுக்கடையை சேர்ந்த பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனக்கு திருமணம் நடந்து குழந்தைகள் இருப்பதை மறைத்து மாணவியுடன் பேசி வந்தார். மேலும் மாணவியை காதலிப்பதாக கூறினார். இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்துள்ளனர். இதற்கிடையே தான் திருவட்டார் பகுதியை சேர்ந்த மாணவியின் தோழியுடனும் வினு பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். இருவருடனும் அவர் நெருக்கமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே வீட்டில் குடும்பம்
இதையடுத்து இரு மாணவிகளையும் காதல் வலையில் வீழ்த்திய வினு அவர்களுடன் வெளியூர் சென்று குடும்பம் நடத்த திட்டமிட்டார். இதையடுத்து இருவரையும் ஒன்றாக அழைத்து சென்று ஜாலியாக இருந்தத அவர் சென்னைக்கு கூட்டிச்சென்று ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி போலீசில் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து வினுவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட இருமாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications