அந்த கார் யாரோடது? விசாரிக்கும் போலீஸ்.. ஆருத்ரா அலையில் சிக்கிய அண்ணாமலை.. மாட்டும் லெப்ட் ஹேண்ட்
சென்னை: அண்ணாமலை மீது புகார் கூறி மேலும் ஒரு பாஜக மாநில நிர்வாகி கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.
கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கட்சி ஒருபோதும் வளராது ஆருத்ரா மோசடி கும்பல் தலைமைக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறது என்று கூறிய மாநில பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.
அதோடு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிப்பும் மரியாதைக்குரிய மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வருகிறேன்.

கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூட தகுதி இல்லாத சிலரை நீங்களும் மரியாதைக்குரிய கேசவ விநாயகம் அவர்களும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்ப்பதாலும் கட்சியில் நீங்கள் சொல்வதைப் போல கட்சி உறுப்பினர்களிடமும் நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது.
அதற்கும் மேல் நேர்மாறாக இங்கே அவர்களது சுய லாபத்திற்காகவும் மதம் சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டுக்குள் பலவிதமான சச்சரவுகளையும் மேலும் எங்களிடமிருந்து தொண்டர்கள் நிர்வாகிகள் இருந்தும் பணம் வசூலிக்க சொல்லியும் மேலும் பணத்தைப் பெற்றுக் கொண்டும் பல விதமான அரசியல்களை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
எங்களை நீங்கள் ஜனநாயகத்துக்கு எதிராக வற்புறுத்தி சில விஷயங்களையும் கோரிக்கைகளையும் செய்ய சொல்வதாலும் என்னைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சிக்கும் உங்களுக்கும். உண்மையாக வேலை பார்த்த திரு.நிர்மல் குமாரை போன்ற நிர்வாகிகளையும் பல இன்னல்களுக்கு ஆளாகிய எந்த ஒரு கட்சி வேலையில் செயல்பட விடாமல் செய்தனர்.
மேலும் ஆருத்ரா போன்ற மோசடி ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகிறது இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் கொள்ளவில்லை இந்தக் கட்சி என்னையும் என் குடும்பத்தாரையும் பழுது பார்த்து விட்டனர்.

மேலும் இந்த பொருளாதார பிரிவின் பிரச்சனைகளையும் நேரடியாக உங்களுக்கும் கட்சி அலுவலகத்துக்கும் பிரச்சினைகளை சொல்லியும் இதுவரை நீங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் நான் எனது பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளரும் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.
இதற்கு முழு காரணமாக இருக்கும் பொருளாதார பிரிவின் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் நரசிங்க பெருமாள் இவர்களை எல்லாரையும் வழிநடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு அண்ணாமலை ஆகிய நீங்கள்தான் நீங்கள் சரி பட செயல்படவில்லை என்று குறிப்பிடுகிறேன்.
பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது என ஊர்ஜிதமான உண்மை இதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளன இதற்கும் மேல் பாரதிய ஜனதா கட்சியில் என்னை அர்ப்பணித்தேன் என்றால் எனது உயிருக்கே பல பாதிப்பு வரும் என்று நினைத்து இந்த கட்சியில் இருந்து நான் நிரந்தரமாக ராஜினாமா செய்கிறேன் நன்றி, என்று குறிப்பிட்டுள்ளார்.

முறைகேடு பின்னணி: ஆருத்ரா நிறுவன மோசடி தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹாரிஸுக்கு கட்சியில் பதவி கொடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.இந்த வழக்கில் கூட சமீபத்தில் மைக்கேல் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய ஹாரிஸ் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்.. நான் பாஜகவில் இணைந்தால் எனக்கு சிக்கல் இருக்காது என்று கூறப்பட்டது. விசாரணையில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறினார்கள். அதை நம்பி சேர்ந்தேன்,
முன்னதாக முதலீட்டாளர்களிடம் ரூபாய் 84 கோடி வரை மோசடி செய்தேன். பாஜகவில் இணைந்த போது பதவி கிடைக்க வேண்டும் என்று லஞ்சம் கொடுத்தேன். கட்சி நிர்வாகிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துவிட்டு பாஜகவில் சேர்ந்தேன், என்று ஹாரிஸ் கூறி உள்ளாராம்.
இவர் தனது வாக்குமூலத்தில் முக்கியமான சில விஷயங்களை குறிப்பிட்டு உள்ளாராம். ராணிப்பேட்டை மாவட்ட பாஜக பொறுப்பாளர் சுதாகர் உள்ளிட்ட சிலரின் பெயரையும் கூறி உள்ளாராம்.

பேட்டி: முன்னதாக இந்த புகார்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், அண்ணாமலையின் தலைமை மீது கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே ரபேல் விவகாரத்தில்.. ரபேல் வாட்ச் கட்டினால் நான் தேசியவாதி என்று கூறுகிறார். அதற்கு இதுதான் பதிலா? என்னங்க இது? இப்படி எல்லாம் பேசினால்.. அவர் மீது விமர்சனம் வைக்காமல் என்ன செய்வார்கள். ஆருத்ரா விவகாரத்தில் சிக்கியவர் ஹரிஸ். அவர் அந்த விவகாரத்தில் சிக்கிய பின்புதான் பாஜகவில் பதவியே கொடுக்கிறார்கள். அவரை கட்சியில் சேர்க்கிறார்கள்.
இதை எல்லாம் தேசிய தலைமை பார்த்துக்கொண்டு இருக்கிறது. தேசிய தலைமை கணக்கில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. இந்த வழக்கில் ஹாரிஸை முதலில் தேடும் போது அவர் புதுச்சேரியில் இருக்கிறார். அதன்பின் தெலுங்கானாவில் இருக்கிறார். பின் டெல்லியில் இருக்கிறார். இந்த 3 இடங்களில் அவர் யாரால் தங்க வைக்கப்பட்டார்.
அவர் யாருடைய வாகனத்தில் சென்றார். யாரிடம் போனில் பேசினார் என்பதை கண்டுபிடிப்பது பெரிய விஷயமே இல்லை. அதில் சிக்க போவது யார்? போலீஸ் இதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். அண்ணாமலையின் இடதுகரமோ, வலதுகரமோ சிக்க போகிறார்கள்.
அந்த கால் டீட்டெயில் எடுத்து விசாரணை செய்தால் யார் மாட்டுவார்கள்? இப்படி ஒருவரை கட்சியில் சேர்த்ததும் இவர் மீதான புகார் வந்ததும் அவரை நீக்கி இருக்க வேண்டும். ஆனால் நீக்கவில்லை. மாறாக அமர் பிரசாத் ரெட்டி.. ஹரிஸை நன்றாக பேக்கிரவுண்ட் விசாரணை செய்துவிட்டுதான் சேர்த்தோம்.
அவர் மீது புகார் இருக்கிறதா என்று கேட்கிறார். புகார் இல்லாமல்தான் ஹரிஸ் முன்ஜாமீனுக்கு தாக்கல் செய்து இருக்கிறாரா. ஆருத்ரா கோல்டு, ஐஎப்எஸ் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்ட பலர் பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றனர்.
இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டுதான் அண்ணாமலை திமுக மீது குற்றச்சாட்டு வைக்கிறார். திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் வைப்பேன் என்று அண்ணாமலை கூறுகிறார். இவர்களை வைத்துக்கொண்டு அண்ணாமலை இப்படி பேசுவது சரியா?
ஏப்ரலில் ஊழல் குற்றச்சாட்டுகளை வைப்பேன் என்று அவர் சொல்வதை நான் தவறாக சொல்லவில்லை. ஆனால் தன்னுடைய முதுகில் அழுக்கை வைத்துக்கொண்டு அவரால் எப்படி திமுக மீது குற்றச்சாட்டை வைக்க முடியும், என்று பத்திரிகையாளர் குபேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications