விஜயின் தளபதி அருண்ராஜ்? மத்திய அரசு பதவியை உதறிவிட்டு, தவெகவில் இணைகிறாரா.. இவர் யார்னு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராக பதவி வகித்து வரும் ஐ.ஆர்.எஸ் அதிகாரி கே.ஜி. அருண் ராஜ், விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தன்னுடைய பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ள நிலையில், அருண் ராஜ் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் உண்டாக்கி வருகிறது. என்ன நடக்கிறது தவெகவில்?

வரப்போகும் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி கொண்டிருப்பதை போலவே, விஜய்யின் தவெகவும் மும்முரமாகி வருகிறது.. குறிப்பாக கூட்டணி விஷயத்தில் ஆரம்பம் முதலே விஜய் கட்சி கவனம் செலுத்தி வருகிறது.அதிமுக-பாஜக ஒருபுறமும், திமுக, விசிக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டுகள், மநீம கட்சிகள் மறுபுறமும் என இணைய உள்ளதாக தெரிகிறது. பாமக, தேமுதிக இருவரும் யாருடன் சேர போகிறார்கள் என்று தெரியவில்லை.. இதற்கு நடுவில்தான் விஜய்யின் கட்சி சூடுபிடித்து வருகிறது. விஜய்யுடன் யார் கூட்டணி சேர போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது.

Arunraj TVK Central government officer

பலமாகும் கட்டமைப்பு

இதுஒருபுறமிருந்தாலும், கட்சியின் கட்டமைப்பை விஜய் பலப்படுத்தி வருகிறார்.. கட்சி துவங்கியதிலிருந்தே ஏராளமான பிரபலங்கள் தவெகவில் இணைந்தபடி உள்ளனர்.. அந்தவகையில் விசிகவிலிருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்து வியப்பை தந்திருந்தார்.. உடனே அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வரும்நிலையில், அதிருப்திக்குள்ளாகும் பலர் விஜய் கட்சியை நோக்கி படையெடுப்பார்கள் என்றும் கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அருண்ராஜ் குறித்த செய்திகளும் கசிந்தவாறு உள்ளன.. தமிழ்நாட்டை சேர்ந்தவர் அருண் ராஜ்..

அறிவிக்கப்படாத ஆலோசகர்

IRS எனப்படுகிற இந்திய வருவாய்த்துறையில் உயரதிகாரியாக பணியாற்றுபவர்.. எனவே, கட்சி துவங்கியதில் இருந்து, விஜய்க்கு இவர்தான் ஆலோசனை வழங்கி வந்ததாக சொல்லப்பட்டு வந்தது.. அதாவது அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.

இப்போது இவர், திடீரென தன்னுடைய மத்திய அரசு பணியை ராஜினாமா செய்துள்ளார்.. எதற்காக இந்த விருப்ப ஓய்வு? என்று தெரியவில்லை.. தேர்தல் நெருங்கி வருவதால், விஜய் முன்னிலையில் தவெகவில் இணையலாம் என்றும் பரவலாக செய்திகள் கசிந்துவருகின்றன.

வட்டமடிக்கும் கணிப்புகள்

ஒருவேளை அருண்ராஜ் விஜய் கட்சியில் இணைந்தால், தவெக இணை பொதுச்செயலாளராக நியமிக்கப்படலாம் என்றும் கணிப்புகள் கிளம்பியிருக்கின்றன.

அருண்ராஜ் சேலத்தை சேர்ந்தவர்.. இவர் ஒரு டாக்டர்.. யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் அதிகாரியானவர். கடந்த 2009ல் வருமானவரி துறை அதிகாரியாக சென்னையில் பணியை துவங்கியவர்.. கடந்த 2016-ல் போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டிலும், அவரது உறவினர் சீனுவாச ரெட்டி ஆகியோரது வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியிருந்தனர்.. ரூ70 கோடி ரூ2,000 நோட்டுகள் சிக்கியிருந்தது அப்போது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது..

பாட்னா ஆணையர்

இந்த ரெய்டின் பின்னணியில் செயல்பட்டிருந்ததால் அருண்ராஜ், மத்திய அரசின் குட்புக்கிலும் இடம்பெற்றார்.. கடந்த 2021ல்தான், பீகார் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார் அருண்ராஜ். பாட்னாவில் வருவாய்த் துறையில் கூடுதல் ஆணையராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இத்தனை நாட்களும் நேரடி அரசியலில் ஈடுபடாமல், விஜய்க்கு பின்னணியில் இருந்து உதவி வந்துள்ளார்.. தற்போது விஜய்க்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் ஜான் ஆரோக்கியசாமியை, அருண்ராஜ் தான் விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தாராம்.

இந்நிலையில்தர்ன, திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா அருண்ராஜ் செய்துள்ளார்.. இந்த ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியில் இல்லாததால், இனிமேல் நேரடி அரசியலில் அருணராஜ இறங்க தடைகள் எதுவும் இருக்காது.

தோளோடு தோள்

அருண்ராஜுக்கு தவெகாவில் இணை பொதுச்செயலாளர் அல்லது துணை பொதுச்செயலாளர் என மிகமிக முக்கிய பதவி வழங்கப்படும் என தெரிகிறது. காரணம், ஆரம்பத்திலிருந்த விஜய்யின் ரசிகர் மன்றம், பிறகு மக்கள் இயக்கம், இப்போது தமிழக வெற்றிக் கழகம் என ஒவ்வொரு வளர்ச்சியிலும், அருண்ராஜ் விஜய்யுடன் தோளோடு தோள் நின்றவர்..

அந்த அளவுக்கு விசுவாசத்தை காட்டி வரும் அருண்ராஜுக்கு பொதுச்செயலாளர் பதவியே தரலாம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அந்த பொறுப்பில் இப்போது புஸ்ஸி ஆனந்த் இருப்பதால், இணை அல்லது துணை பொதுச்செயலாளர் பொறுப்பு தரப்படலாம் என்று தெரிகிறது. எனினும் இதுகுறித்து, தவெக தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+