விஜய் மவுசு குறைந்துவிட்டதா? மகன் படத்துக்கு வந்த நிலை... விஜய் சேதுபதியின் ‘பத்தா’ கொடுத்த ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சினிமாவில் இருந்த காலத்தில் அவருடைய ஒரு படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு என்பது தனி கணக்கு. படம் எப்படி இருக்கிறது என்பதைத் தாண்டி, முதல் நாளிலேயே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அள்ளும். விஜய் அரசியலுக்கு வந்து தமிழக முதல்வராக இருக்கும் இந்த சூழலில், அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் படம் வெளியாகும்போது அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகத்தான் இருக்கும் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் 'சிக்மா' வெளியான பிறகு வெளியாகிக் கொண்டிருக்கும் வசூல் நிலவரத்தைப் பார்த்தால், விஜய்யின் சினிமா மவுசு குறைந்துவிட்டதா என்று கேள்வி எழுகிறது.

Vijay

விஜய்யின் சினிமா மவுசு

இதை அவசரமாக முடிவு செய்துவிட முடியாது. ஆனாலும், 'சிக்மா'வின் வசூலும் அதே நேரத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 'பத்தா' படத்தின் வசூலும் கொஞ்சம் கவனமாகப் பார்த்தால், இந்த கேள்வி ஏன் வருகிறது என்பது புரியும். அதாவது ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்த 'சிக்மா' அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் இந்தியாவில் ரூ.2.35 கோடி வசூல் செய்ததாக வசூல் கணிப்புகள் தெரிவித்தன.

அதுவும் முதல் படம் என்பதால், ஆரம்பத்தில் இது மோசமான தொடக்கம் இல்லை என்றுதான் சொல்லப்பட்டது. முதல் நாளில் 'பத்தா'வின் வசூல் ரூ.1.50 கோடியாக இருந்த நிலையில், 'சிக்மா' ரூ.2.35 கோடி வசூல் செய்தது. அதனால் முதல் நாளில் பார்த்தால் ஜேசன் சஞ்சயின் படம் முன்னிலையில் இருந்தது. அப்போது சமூக வலைதளங்களில் கூட 'விஜய் சேதுபதியை விட விஜய்யின் மகன் படத்துக்குத்தான் ஓப்பனிங் அதிகம்' என்று ஒப்பீடுகள் வர ஆரம்பித்தன. ஆனால் அடுத்த நாளிலேயே கணக்கு மாறிவிட்டது.

2வது நாளிலேயே திரும்பிய கதை

'சிக்மா'வின் 2வது நாள் வசூல் ரூ.1.50 கோடியாகக் குறைந்தது. அதாவது முதல் நாளில் கிடைத்த ரூ.2.35 கோடியிலிருந்து வசூல் கீழே வந்துவிட்டது. அதே நேரத்தில் அக்டோபர் 1-ம் தேதி வெளியான 'பத்தா', 2வது நாளில் ரூ.2.70 கோடி நிகர வசூல் செய்தது. முதல் நாளை விட 2வது நாளில் சுமார் 80 சதவீதம் உயர்வு. இங்கேதான் இந்த இரண்டு படங்களுக்கும் இடையிலான வித்தியாசம் நன்றாகத் தெரிகிறது.

ஞாயிற்றுக்கிழமை வித்தியாசம்

சனிக்கிழமையிலாவது 'சிக்மா'வுக்கு ஞாயிற்றுக்கிழமை பெரிய ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமையும் இந்திய நெட் வசூல் ரூ.1.50 கோடியிலேயே இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று நாட்களில் 'சிக்மா'வின் இந்திய வசூல் ரூ.5.35 கோடி. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், முதல் நாளில் ரூ.2.35 கோடி வசூல் செய்த படம், 3வது நாளில் கூட அந்த முதல் நாள் வசூலைத் தொட முடியவில்லை.

அதே சமயம் 'பத்தா'வுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் மிகப்பெரிய வசூல் நாள் ஆகியிருக்கிறது. 4வது நாளில் ரூ.3.10 கோடி இந்திய நெட் வசூல் செய்து, 4 நாட்களில் ரூ.10.05 கோடி நிகர வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஆரம்பத்தில் 'சிக்மா'வுக்கு இருந்த முன்னிலை, அடுத்தடுத்த நாட்களில் 'பத்தா'விடம் போய்விட்டது.

இதற்கும் விஜய் சேதுபதி சர்ச்சைக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால் இங்கேதான் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய 'லீடர்ஷிப்' தொடர்பான கருத்து, முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் எடுத்துக்கொண்டார்கள்.

விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு

விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தார்கள். விஜய் சேதுபதியை நேரடியாகக் குறிப்பிட்டு பதிவுகளும், மீம்களும் வெளியாகின. பின்னர் இந்த விவகாரம் குறித்து விஜய் டிவியே விளக்கம் கொடுத்தது. முக்கியமாக, விஜய் சேதுபதி தனது பேச்சில் விஜய்யையோ அவரது கட்சியையோ சொல்லவில்லை என்று கூட விளக்கம் கொடுத்திருந்தார். அப்போது சமூக வலைதளங்களில் பார்த்தால், 'விஜய் சேதுபதியின் படத்தை புறக்கணிப்போம்' என்ற மனநிலையிலும் சில பதிவுகள் இருந்தன.

ஆனால் இப்போது தியேட்டர் வசூல் வேறு ஒரு விஷயத்தைச் சொல்கிறது. அதே விஜய் சேதுபதியின் 'பத்தா' படத்தை மக்கள் தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் நாளில் குறைவாகத் தொடங்கிய படம், அடுத்தடுத்த நாட்களில் வசூலை உயர்த்திக் கொண்டே செல்கிறது. 4வது நாளில் படத்தின் அதிகபட்ச ஒருநாள் வசூலும் கிடைத்திருக்கிறது. இதைத்தான் சிலர் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

அப்போது விஜய் சேதுபதியை இவ்வளவு விமர்சித்தார்களே... இப்போது அவர் படம் தான் தியேட்டரில் நல்லா போகுதே? என்பதுதான் அந்த கேள்வி. அப்படியென்றால் விஜய் மவுசு போய்விட்டதா? என்று கேள்வி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+