நீதாம்மா பெஸ்ட் பொண்டாட்டி.. 5 முறை விஷம்! மாதுளை ஜூஸில் கணவனை கணக்கு தீர்த்த அம்முபி..வெளியான ஆடியோ
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கணவனை உணவிலும் மாதுளை ஜூஸிலும் விஷம் வைத்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இந்த நிலையில் சாப்பாட்டில் விஷம் வைத்து கொடுத்து விட்டேன் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் என மனைவி கள்ளக்காதலனுக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் ரசூல். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சிறுபான்மை பிரிவு துணை செயலாளராக இருந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். மனைவியின் பெயர் அம்முபி.
இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி தனது வீட்டில் சாப்பிட்டவுடன் ரஸூலுக்கு ரத்த வாந்தி வாந்தி வந்து மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்த போது அவரது உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது.

இதனால் ரசூலுகு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது தொடர்ந்து. தனது தம்பி மனைவி அசினாவிடம் சொல்லி அவரது செல்போனை சோதனை செய்ய சொல்லியுள்ளார். அந்த செல்போனில் இருந்த ஆடியோக்கள் அதிர வைக்கும் வகையில் இருந்தது. தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரசூல் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அம்முபி மற்றும் அவரது கள்ளக்காதலனான லோகேஸ்வரனை கைது செய்துள்ளனர்.
அம்முபியின் வீட்டின் அருகே சலூன் கடை வைத்திருந்த லோகேஸ்வரனுக்கும், அம்முபிக்கும் பழக்கம் ஆகியுள்ளது. இருவரும் முறை தவறிய உறவில் இருந்த நிலையில் தனது நெஞ்சில் அம்முபியின் பெயரை பச்சை குத்தி இருக்கிறார் லோகேஸ்வரன். இந்நிலையில் சலூன் கடைக்கு ரசூல் சென்றபோது, அம்முபி லோகேஸ்வரனுக்கு வீடியோ கால் செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரசூல் லோகேஸ்வரனை அடித்ததோடு வீட்டுக்கு சென்று அம்முபியையும் தாக்கியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அம்முபி, சாப்பாட்டில் மருந்தை ஐந்து தடவை கொடுத்திருக்கிறார். கடைசியாக மாதுளை ஜூஸில் விஷத்தை கலந்து கொடுத்த நிலையில் தான் ரசூல் உயிரிழந்தார். இந்த நிலையில் அம்முபி, லோகேஸ்வரன் அனுப்பிய ஆடியோக்கள் வெளியாகி உள்ளது.
அந்த ஆடியோவில் பேசியுள்ள லோகேஸ்வரன்," நான் கொடுத்த மருந்தை சாப்பாட்டில் கலந்து கொடுத்து விடு அதில் கொஞ்சம் கலர் மாறும், குருனை குருணையாக இருந்தால் அதனை எடுத்துப் போட்டு விடு. மருந்தை ஜூஸில் கலந்து பார்த்தபோது அது லைட்டாக கலர் மாறி இருக்கிறது. எனவே அதனை வடிகட்டி கொடுத்துவிடு" என சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் ரசூல் மாதுளை ஜூசை குடித்ததும் மயங்கி நிலையில் "நான் கொடுத்த ஜூசை அவர் குடித்துவிட்டார் மயங்கி விட்டார் இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிந்துவிடும் என நினைக்கிறேன்" என ஆடியோ அனுப்பி உள்ள நிலையில், அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications