தனி ரூட்டில் பிரேமலதா.. கூட்டணி அறிவிப்புக்கு கட்சிகள் வெயிட்டிங்.. வேட்பாளர் நேர்காணலுக்கு அழைப்பு!
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி முடிவை எப்போது அறிவிப்பார் என்பது அரசியல் அரங்கில் தீவிரமாக உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், பிரேமலதா விஜயகாந்த், மாவட்ட வாரியாக விருப்ப மனு அளித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்த இருப்பது அரசியல் அரங்கில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் அறிவிக்கவில்லை. திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இதனால் திமுக கூட்டணிக்கு செல்லுமா? இல்லை மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா? என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தேமுதிகவை பொறுத்தவரை, இரட்டை இலக்கத்தில் சட்டசபை தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா இடம் உள்ளிட்டவற்றை பிரேமலதா விஜயகாந்த் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. மேலும், என்டிஏ கூட்டணியில் மத்திய அமைச்சர் பதவியையும் தேமுதிக கேட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என அக்கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா மையத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம் பெறலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்.டி.ஏ கூட்டணியில் தேமுதிக இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்தார். “மார்ச் 1 ஆம் தேதி பார்க்கலாம்” என்று நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்.எடி.ஏ பொதுக்கூட்டம் வரும் மார்ச் 1ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதில் பிரேமலதா பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், தேசிய திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடைபெறவுள்ள 2026 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் கீழ்கண்ட தேதிகளில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நேர்காணல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் மாவட்டம் வாரியாக
நேர்காணல் நடைபெறும் தேதி நேரம்
20.02.2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
1) சென்னை, 2] திருவள்ளூர், 3) இராணிப்பேட்டை, 4) வேலூர், 5)திருப்பத்தூர்
20.02.2026 வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு
1] மயிலாடுதுறை, 2] கடலூர், 3) விழுப்புரம், 4) திருவண்ணாமலை, 5) காஞ்சிபுரம் 6) செங்கல்பட்டு
21.02.2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு
1) நீலகிரி, 2] கோவை 3) திருப்பூர், 4) ஈரோடு, 6] கரூர், 6) நாமக்கல், 7] பெரம்பலூர், 8) அரியலூர், 9) கள்ளக்குறிச்சி
21.02.2028 சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு
1) கிருஷ்ணகிரி, 2) தருமபுரி, 3) சேலம், மற்றும் புதுச்சேரி மாநிலம்
22.02.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு
1) கன்னியாகுமரி, 2) திருநெல்வேலி, 3) தென்காசி, 4] தூத்துக்குடி, 5) விருதுநகர், 6) இராமநாதபுரம், 7) சிவகங்கை, 8] மதுரை, 9) தேனி, 10] திண்டுக்கல்
ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு
1] நாகை, 2) திருவாரூர், 3) தஞ்சாவூர், 4) புதுக்கோட்டை 5) திருச்சி
பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி முடிவை எப்போது அறிவிப்பார் என்பது அரசியல் அரங்கில் தீவிரமாக உற்றுநோக்கப்பட்டு வருகிறது. திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் சீட் எண்ணிக்கை பங்கீடு இன்னும் முடிவுக்கு வரவில்லை. தேமுதிக எந்தப் பக்கம் வருகிறது என்பதைப் பொறுத்தே சீட் பங்கீடு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி முடிவை அறிவிக்காமல் கூலாக, மாவட்ட வாரியாக விருப்ப மனு அளித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்த இருப்பது அரசியல் அரங்கில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. தேமுதிக இழுத்தடிப்பதால் முன்னணி கட்சிகளின் தலைமைகள் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications