நான் கூறியதாலேயே ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்தார்.. குருமூர்த்தி பரபரப்பு
Recommended Video
சென்னை: நான் கூறியதாலேயே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் தியானம் செய்தார் என்று துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்த நிலையில், அப்போது முதல்வராக பொறுப்பேற்ற இப்போதைய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் சசிலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் தொடங்கினார்.
இதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த அவர், தன்னை முதல்வர் பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தாக கூறி பரபரப்பை ஏற்படுதினார்.

சிறையில்
அதன் பிறகு அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஒ பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்தது. சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டிய நிலையில் திடீரென ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததால் பெங்களூரு சிறைக்கு செல்ல நேர்ந்தது.

சசிகலா டிடிவி நீக்கம்
இதன் காரணமாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்து அவரை முதல்வராக பதவி ஏற்க வைத்துவிட்டு அன்றே சிறைக்கு சென்றார். அதன்பிறகு சில மாதங்களில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

ஓபிஎஸ் துணை முதல்வர்
அதேநேரம் பிரிந்து கிடந்த அதிமுக ஒன்று சேர்ந்தது. ஒ பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றார். அதிமுக என்ற கட்சி தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டை தலைமையின் கீழ் வந்துள்ளது.

ஒபிஎஸ் தியானம்
இந்நிலையில் நான் கூறியதாலேயே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் தியானம் செய்தார் என்று துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்,

அதிமுகவை இணைத்தேன்
ஓபிஎஸ் தியானம் செய்ததன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஓபிஎஸ்சின் தியானத்திற்கு பின் பிரிந்து கிடந்த அதிமுகவை தானே ஒருங்கிணைத்தேன் என்றும் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications