இந்த முறை தப்புமா தாம்பரம்.. நேரடியாக களத்தில் இறங்கிய தலைமை செயலாளர் இறையன்பு.! அதிரடி ஆய்வு
சென்னை: வடகிழக்கு பருவு மழை இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு நேரடியாகக் களத்தில் இறங்கி உள்ளார்.
ஒவ்வொரு முறையும் மழைக் காலம் தொடங்கினாலே, அது சென்னைவாசிகளுக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தும். சிறிய மழைக்கே சென்னை சாலைகள் குளங்களாகிவிடும்.
பல ஆண்டுகளாகவே சென்னையில் இதே நிலை தான் இருந்து வந்தது. இருப்பினும் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளால் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

சென்னை மழை
இதன் காரணமாகவே மழைக் காலம் என்றால் சென்னைவாசிகளுக்கு அது ஒரு அலர்ஜியாகவே மாறிவிட்டது. அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் சென்னை அதிக மழையைப் பெறும். இந்த காலத்தை எப்படியாவது கடந்த விட வேண்டும் என்பதே சென்னைவாசிகளின் கனவாக இருக்கும். கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக மழைநீர் வடிகால் வாரிய பிரச்சினையைச் சரி செய்வோம் என அறிவித்தது.

வடிகால் பணிகள்
இருப்பினும், கடந்தாண்டு அதேபோல தண்ணீர் தேங்கவே செய்தது. ஆட்சிக்கு வந்த பிறகு சில மாதங்களே இருப்பதால், இந்த பிரச்சினை என்று திமுக தரப்பில் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும், இன்று பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், இன்னும் கூட சில இடங்களில் பணிகள் நிறைவடையவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

தாம்பரம்
பொதுவாக பருவமழை காலங்களில் நகர்ப்பகுதிகளைக் காட்டிலும் புறநகரான தாம்பரத்தில் தான் பாதிப்பு மிக மோசமாக இருக்கும். இந்தச் சூழலில் தாம்பரம் மாநகராட்சி பம்மல் அனகாபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

ஆய்வு
பம்மல் பகுதியில் ஒரு கோடி 25 லட்சம் செலவில் நடைபெறும் நடவாய் ஓடை வடிகால் பணிகள் அனகாபுத்தூர் மேட்டுத் தெருவில் நான்கு கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார் அடையாறு ஆறு செல்லும் பகுதிகளிலும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் பணிகளைப் பொதுமக்களுக்குப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தி தரமாக முடிக்க வேண்டும்

இறையன்பு
மழைநீர் கால்வாய் பணிகள் முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் சாலைகளைச் சீரமைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.. இதில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். இந்தாண்டு மழை நீர் எந்தளவுக்குத் தேங்கும் என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் சென்னைவாசிகள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications