செங்கல்பட்டு அருகே டோல்கேட்டில் ஹேப்பி நியூஸ்.. சிறப்பு ஏற்பாட்டால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
சென்னை: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்கு மக்கள் திரும்புவதால், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஆத்தூர் சுங்கச் சாவடியில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. பரனூரில் வேறு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து சுமார் கிட்டத்தட்ட 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

சொந்த வாகனங்களில் 10லட்சம் பேர் வரை சொந்த ஊருக்கு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. ரயில், பேருந்து, பஸ், சொந்த வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் என சுமார் 20 லட்சம் பேர் வரை சொந்த ஊருக்கு போயிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது..
இவர்கள் அனைவரும் இன்று காலை தொடங்கியே சென்னைக்கு வருகிறார்கள். இன்று இரவு லட்சக்கணக்கானோர் சென்னைக்கு திரும்ப உள்ளார்கள். நாளை காலை சென்னைக்கு ஏராளமான சிறப்பு பேருந்துகள் பல்வேறு ஊர்களில் இருந்து வர உள்ளன,..
இதனால் வழக்கமான வாகனத்தை விட பல மடங்கு அதிகப்படியான வாகனங்கள் திருச்சி முதல் சென்னை வரை இருக்கிறது. குறிப்பாக உளுந்தூர் பேட்டையில் இருந்து சென்னை வரை வாகன நெருக்கம் மிக அதிகமாக இருக்கும். கோவை,சேலம்,ஈரோடு, திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கள்ளக்குறிச்சி வழியாக உளுந்தூர் பேட்டையில் இணைந்துவிடும். மதுரை, திருநெல்வேலி, திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமரி மார்க்கமாக வரும் வாகனங்களும் உளுந்தூர் பேட்டையில் இணைந்துவிடும்.
இதனால் சென்னை முதல் திருச்சி வரை சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக உளுந்தூர் பேட்டை, விக்கிரவாண்டி, மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய நான்கு சுங்கச்சாவடிகளை அதிகப்படியான வாகனங்கள் இன்று இரவும், நாளையும் கடக்க உள்ளன.
இந்நிலையில் அதிகப்படியான வாகனங்கள் வரும் என்பதால் சுங்கச்சாவடிகளில் வழக்கமான கவுண்டர்களை தாண்டி கூடுதல் கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஆத்தூர் சுங்கச் சாவடியில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் இன்றி அங்கு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் விரைவாக அந்த சுங்கச்சாவடியை கடந்து வருகிறார்கள்..
இதேபோல் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் இன்றி பரனூர் சுங்கச்சாவடி காணப்படுகிறது. வழக்கமாக அதிகமான நெரிசல் காணப்பபடும் பரனூர் தற்போது குறைவான வாகனங்களே கடந்து செல்கின்றன.












Click it and Unblock the Notifications