வீட்டு கடன் இஎம்ஐ கட்டுறீங்களா? உங்களின் இன்ஸ்டால்மெண்ட் குறைய போகிறது.. வங்கிகள் முக்கிய முடிவு
சென்னை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (பிபி) குறைப்பதாக அறிவித்து உள்ளது. அதாவது 6 சதவீதமாக குறைத்து உள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல முன்னணி பொதுத்துறை வங்கிகள், அவற்றின் ரெப்போ உடன் இணைக்கப்பட்ட பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களை (RBLR) அதற்கேற்ப மாற்றி அமைத்துள்ளன. இந்த மாற்றம் மூலம் வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் ரெப்போ உடன் இணைக்கப்பட்ட கடன்கள் குறைக்கப்பட்டு உள்ளன.

இந்தியன் வங்கி
ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து இந்தியன் வங்கி அதன் கடன் விகிதங்களைத் திருத்தியுள்ளது. வங்கி அதன் ரெப்போ பெஞ்ச்மார்க் விகிதத்தை 6.25% லிருந்து 6% ஆக குறைத்துள்ளது; இதன் விளைவாக, ரெப்போ-இணைக்கப்பட்ட பெஞ்ச்மார்க் கடன் விகிதம் (RBLR) 9.05% லிருந்து 8.7% ஆக குறைக்கப்பட்டுள்ளது. வங்கியின் பிஎஸ்இ படி, இந்த திருத்தப்பட்ட விகிதங்கள் ஏப்ரல் 11, 2025 முதல் நடைமுறைக்கு வரும், மேலும் அடுத்த மறுஆய்வு வரை அனைத்து ரெப்போ-இணைக்கப்பட்ட கடன்களுக்கும் இது பொருந்தும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதக் குறைப்பை பின்பற்றும் விதமாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் ரெப்போ-இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை (ஆர்எல்எல்ஆர்) திருத்தியுள்ளது. RLLR 9.1% இலிருந்து 8.85% ஆக குறைக்கப்பட்டுள்ளது, இதில் 20 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு உள்ளன.
திருத்தப்பட்ட விகிதம் ஏப்ரல் 10, 2025 முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் இந்த வங்கியின் தற்போதைய மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட் அடிப்படையிலான கடன் விகிதம் (எம்சிஎல்ஆர்) மற்றும் அடிப்படை விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பேங்க் ஆஃப் இந்தியா
ரிசர்வ் வங்கியின் 25 அடிப்படை புள்ளிகள் ரெப்போ வட்டி விகிதக் குறைப்புக்கு ஏற்ப பாங்க் ஆஃப் இந்தியாவும் அதன் கடன் விகிதங்களைக் குறைத்துள்ளது. வங்கி அதன் ரெப்போ இணைக்கப்பட்ட பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை (RBLR) 9.1% இலிருந்து 8.85% ஆகக் குறைத்துள்ளது, திருத்தப்பட்ட விகிதம் ஏப்ரல் 9, 2025 முதல் அமலுக்கு வருகிறது.
ரெப்போ ரேட்
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (பிபி) குறைப்பதாக அறிவித்து உள்ளது. அதாவது 6 சதவீதமாக குறைத்து உள்ளது. அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. இதன் மூலம் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வெளிப்புற அளவுகோல் கடன் விகிதங்களும் (EBLR) குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கார், வீடு லோன்களின் EMI குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 6.5%லிருந்து 6.25%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 0.25% வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 11 முறை இதில் மாற்றம் செய்யப்படாத நிலையில் தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது
எப்படி நிர்ணயம் செய்யப்படும்
ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியை நிர்ணயம் செய்யும்.
இந்த விகிதம் உயர்ந்தால் வட்டி உயரும். அதேபோல் கட்ட வேண்டிய தொகை உயரும். ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் வட்டி உயர்வதால் இஎம்ஐ கட்ட வேண்டிய காலமும் உயரும். உதாரணமாக நீங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கட்டுகிறீர்கள். 20 வருடங்களுக்கு இஎம்ஐ கட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ரெப்போ ரேட் உயரும் பட்சத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வட்டி கூடுதல் ஆகும். இதனால் இஎம்ஐ உயரும். ஒருவேளை இஎம்ஐ உயராத பட்சத்தில் வங்கிகள் இஎம்ஐ செலுத்தும் காலத்தை உயர்த்தும். உதாரணமாக இஎம்ஐ 35 ஆயிரமாக உயரும் அல்லது இஎம்ஐ செலுத்தும் காலம் 25 ஆண்டுகள் கூட ஆகும். இது வெறும் உதாரணம்தான். ரெப்போ ரேட் உயரும், இறங்கும் விகிதத்தை வைத்து இது மாறும். இப்படிப்பட்ட நிலையில்தான் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு முக்கியமான நற்செய்தி ஒன்றை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
இதெல்லாம் ராஜ யோகம்!
பொதுவாக ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்வது அல்லது இஎம்ஐ காலத்தை
உயர்த்துவது பற்றி வங்கிதான் முடிவு எடுக்கும். அதாவது உங்களிடம் கேள்வி கேட்காமல் அவர்கள் முடிவு எடுத்து உங்களிடம் தெரிவிப்பார்கள்.
லோன் எடுத்தவர்களுக்கு இதில் குரல் எதுவும் கிடையாது. அவர்கள் முடிவு எதையும் எடுக்க முடியாது. அதன்படி இனிமேல், உங்களது ஒப்புதல் இல்லாமல் இதில் மாற்றங்களை செய்ய முடியாது. வீட்டுக்கடன் காலத்தை அல்லது EMI ஐவங்கிகள் மாற்ற முடியாது. இதில் வங்கிகள் - லோன் வாங்கியவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
அதேபோல் வீட்டுக்கடன் காலத்தை உயர்த்த வேண்டும் என்று உங்களை வங்கிகள் வற்புறுத்த முடியாது. அதேபோல் EMI ஐ வங்கிகள் மாற்றுவதை பற்றியும் வங்கிகள் பிரஷர் கொடுக்க முடியாது. நீங்கள் சொல்லும் முடிவையே இனி வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் முடிவ எடுக்காமல் காலம் தாழ்த்த முடியாது.
உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். அதாவது ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்வது அல்லது இஎம்ஐ காலத்தை உயர்த்துவது பற்றி நீங்கள் எடுக்கும் முடிவை வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்த்த விரும்பினால் உயர்த்திக் கொள்ளலாம். இஎம்ஐ காலத்தை உயர்த்த விரும்பினால் அதை உயர்த்திக் கொள்ளலாம்.
ரெப்போ விகிதம் இந்த வருட தொடக்கத்தில் 6.50% ஆக இருந்தது. அதன்பின் பிப்ரவரியில் இதன் விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் அப்போது வட்டி விகிதம் 6.25% ஆக உள்ளது. இது வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு பெரிய பலன் அளிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் இரண்டு முறை ரெப்போ குறைக்கப்பட்டு தற்போது ரெப்போ விகிதம் 6% ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications