grok ஏஐ பெண்களை பிகினியில் காட்டவில்லை என்ற உடன் புதிய ரூட்டை கையில் எடுத்த 'சில்லறைகள்'
சென்னை: எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு அங்கமான grok ஏஐ பெண்களை பிகினியில் காட்டவில்லை என்ற உடன் புதிய ரூட்டை 'சில்லறைகள்' கையில் எடுத்துள்ளார்கள்.. பெண்களை இழிவுப்படுத்தி காட்டக்கூடாது என்று எக்ஸ் தளத்திற்கும், grok ஏஐ நிறுவனத்திற்கும் மத்திய அரசு அண்மையில் கடுமையான உத்தரவிட்டது. அதன்பிறகு ஓரளவு சரியானது. ஆனால் grok ஏஐ பெண்களை பிகினியில் காட்டவில்லை என்ற உடன் வேறு பாணியை கையில் எடுத்திருக்கிறார்கள். இது அதனைவிட ஆபத்தானதாக உள்ளது. மத்திய அரசு தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
பெண்களை ஆபாசமாக பார்க்கும் வக்கிரம் உடையவர்கள் உலகம் முழுவதுமே அதிகமாக இருக்கிறார்கள். உயர்ந்த பதவியில் இருப்பார்கள். சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படும் பல்வேறு துறைகளில் உச்ச பட்ச பதவியில் கூட இருக்கிறார்கள்..

நடிகர்கள், இயக்குனர்கள், கலைஞர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், சாமியார்கள், மத போதகர்கள் என பல்வேறு பொறுப்பில் இருப்பார்ர்கள். இவர்கள் புனிதம் என்ற கேட்டை போட்டுக்கொண்டு அதற்கு சாக்கடையாக வாழ்ந்து வருபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். உலகத்தின் ஆகச்சிறந்த சில்லறைகள் இவர்கள் தான் என்று... அவர்களின் அந்தரங்க விவகாரங்கள் வெளியே வரும் போது தான் தெரியும்..
பெண்களை பார்க்கும் கோணம்
அதேபோல் பலர் சமூக வலைதளங்களில் தங்களின் வக்கிர குணத்தை காட்டுவார்கள்.. பெண்களை பாலியல் பொருளாக பார்ப்பார்கள். அவர்களை ரசிக்க கேவலமான செயல்களில் இறங்கவும் தயங்கமாட்டார்கள்.. இவர்களில் பலர் அந்த காலத்தில் கவர்ச்சி புத்தகளின் மோகம் கொண்டவர்களாக இருந்திருப்பார்கள்.. இவர்கள் தற்போது நடிகைகளை, பிரபலங்களை, தங்களுக்கு தெரிந்த பெண் ஆளுமைகளை கவர்ச்சியாக பார்க்க இப்போது ஏஐக்களை பயன்படுத்துகிறார்கள். டீப் பேக் எனப்படும் தொழில்நுட்பத்தை ஏஐக்கள் அப்படியே பயன்படுத்துகின்றன.
ஏஐக்கள் செய்யும் அசிங்கம்
ஒருவரை ஏஐக்களால் ஆடையில்லாமல் தத்ருபமாக காட்ட முடியும். அதேபோல் ஏஐக்கள் மூலம் அசிங்கமான வீடியோக்களையும் உருவாக்க முடியும். இவை அனைத்து தத்ரூபாம இருக்கும் என்பது மிக கசப்பான உண்மை. அதேநேரம் முக்கியமான ஏஐக்கள் பெண்களை ஆபாசமாக காட்டக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன. அசிங்கமாக காட்டுமாறு கூறினால், பல்வேறு ஏஐக்கள் காட்டாது. ஆனால் grok ஏஐ மட்டும் விதிவிலக்காக பெண்களை பிகினியில் காட்டுமாறு கேட்டால் தத்ரூபமாக காட்டும்.. உடைகளை மாற்றி, அவர்கள் உடல் பாகங்களை கூட மாற்றி அசிங்கமாக காட்டும்..
மத்திய அரசு தடை
grok ஏஐ மூலம் பல பெண்களை சமூக வலைதங்களில் ஆபாசமாக சித்தரித்தார்கள். சப்ஸ்கிரைம் செய்த வாடிக்கையாளர் கேட்டால் grok ஏஐ பல தவறான விஷயங்களை செய்து வந்தது. ஒரு கட்டத்தில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் மத்திய அரசு நேரடியாக தலையிட்டது. அத்துடன் தவறான புகைப்படங்களை உடனே நீக்குமாறு வலியுறுத்தியது. அத்துடன் இனிமேல grok ஏஐ பெண்களை பிகினியில் காட்டவும் மத்திய அரசு தடைவிதித்தது. இதனால் சில்லறைகள் சில நாட்கள் அமைதியாக இருந்தார்கள்.
சேட்டையை ஆரம்பித்த சில்லறைகள்
ஆனால் grok ஏஐ பெண்களை ஆபாசமாக காட்ட மறுத்த காரணத்தால், புதிய வழிகளில் இறங்கி உள்ளார்கள் சில்லறைகள்... அதன்படி உடையை தனியாக காட்டி, இந்த உடையில் இந்த நடிகையை காட்டு, இந்த உடையில் இவரை காட்டு, டிரஸ் கலரை மாற்று சில்லறை வேலைகளை மீண்டும் செய்ய தொடங்கி உள்ளார்கள். இப்படி பல நடிகைகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications