மழைக்காலம் வரப்போகுது! செப்.15 வரை தான் கெடு! ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்க -சிவ்தாஸ் மீனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழைநீர் வடிகால் பணிகளைத் தாமதமாக மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது;

''மழைநீர் வடிகால் அமைக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2,325 கோடி மதிப்பீட்டில் 738.22 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

As the North East Monsoon is about to begin, a review meeting regarding the construction of rainwater drainage was held at the Secretariat.

மழைநீர் வடிகால் பணிகளைத் தாமதமாக மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வடிகால் முடிக்கும்போதே வண்டல் வடிகட்டித் தொட்டிகளும் கட்டி முடித்திட வேண்டும். மழைநீர் இணைப்புகள் முடிக்காத இடத்தில் தனிக்கவனம் செலுத்தி இப்பணிகளை மேற்கொண்டு முடித்திட வேண்டும்.

மழைநீர் தேங்கும் பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் அதனைச் சரிசெய்திடவும் வகையிலான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வடிகாலில் மழைநீர் வழிந்தோடும் வகையில் உரிய சாய்வுடன் ( lope)அமைத்திட வேண்டும். மழைநீர் வடிகால்வாய் நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட அனைத்து நீர்வழித்தடங்களிலும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர் வாரிட வேண்டும். வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக மழைநீர் வடிகால் பணிகளை முடித்திட வேண்டும்.குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார வாரியப் பணிகள் போன்ற சாலை வெட்டுக்களை உடனுக்குடன் சீர்செய்ய வார்டு வாரியாகவும், மண்டல வாரியாகவும், தலைமையிடத்திலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறின்றி தகுந்த தடுப்புகள் அமைத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். மேலும், பணி நடைபெறும் இடங்களில், அங்கு வசிப்பவர்களிடம் பணியின் விவரங்கள் தெரியப்படுத்துவதுடன் அது துவங்கும் நாள் மற்றும் முடியும் காலத்தை தெரிவிக்க வேண்டும். அனைத்து முன்னுரிமை பணிகளும் செப்டம்பர்-15க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று பேசும்போது தெரிவித்தார்.''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+