அசானி புயல்: இந்த வீக் என்ட் சென்னைக்கு செம லக்!.. பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்!
சென்னை: அசானி புயலால் இந்த வார இறுதியில் சென்னையில் மழை எப்படியிருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான அசானி புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் நர்சாபூர் இடையே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி கரையைக் கடந்தது.
எனினும், மீண்டும் காற்றழுத் தாழ்வு நிலையாக வலுவிழந்து ஏனாம் -காகிநாடா பகுதியில் வங்கக் கடலை சென்றடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிஸா கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

ஆந்திரா உச்சகட்ட மழை
ஆந்திராவில் உச்சகட்ட மழை பெய்யும் என்பதால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் ஆந்திராவில் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் போது காற்று மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் வீசியது.

தமிழ்நாடு வெதர்மேன்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் கூறுகையில், அசானி புயலால் ஆந்திராவில் கனமழை கொட்டி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 300 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது மிகவும் தீவிர மழையாக பெய்துள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னையில் வரும் வார இறுதியில் நல்ல மழையை கொடுக்கும்.

அசானி புயல்
அசானி புயல் வலுவிழந்தாலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். அக்னி நட்சத்திரத்தால் வட தமிழகத்தில் வெப்ப அலைகளால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் இந்த அசானி புயலால் மழை என்பது சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு நல்ல செய்தியாகும். இந்த வார இறுதியில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

சென்னை
சென்னையில் கடந்த இரு தினங்களாக குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் வெயில் குறைந்துள்ளது. வார இறுதி வரை சென்னை மக்கள் ஏசியில்லாமலேயே ஏசி கொடுக்கும் குளிர்ச்சியைப் பெறலாம் என்பதுதான் இந்த ட்வீட்டின் சாராம்சம். எனவே மக்களே இந்த மழையை என்ஜாய் செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications