என் பையனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் லிஸ்ட்டில் வராது.. சொல்வது ஜெயக்குமார்
சென்னை: திமுகவிற்கு தமிழக அரசியலில் இனிமேல் நிரந்தர வனவாசம்தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். உதயநிதி.. இன்பநிதி நினைத்தாலும் திமுகவை கொண்டு வர முடியாது என்றும் கூறியுள்ளார். என் மகன் போட்டியிட அதிமுகவில் சீட் கேட்பது வாரிசு அரசியல் இல்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான விருப்பமனு விநியோகம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் தொடங்கியது. இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரைக்கும் விருப்பமனுவை பெற்று அதற்கான விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தி திரும்ப அளிக்கலாம். தகுதியுள்ளவர்களுக்கு 40 தொகுதிகளிலும் போட்டியிட சீட் வழங்கப்படும்.

கூட்டணி ஏற்படும் பட்சத்தில் கூட்டணி கட்சியினருக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படும். ஒரு சிலர் கட்சி தலைமையின் மீதான நல்லெண்ணத்தில் பணம் கட்டுவார்கள். இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக நிர்வாகிகள் அலை அலையாக வந்து விருப்பமனு பெற்றுச்செல்வதாக தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து பலர் பாஜகவில் இணைவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், உண்மையான தொண்டர்கள் அதிமுகவில் நீடிக்கிறார்கள். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பிள்ளை பிடிக்கும் வேலை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். அண்ணாமலையின் தாடியை பார்க்கும் போது மாயாண்டி பூச்சாண்டி மாதிரிதான் இருக்கிறது. பூச்சாண்டியை பார்த்து மற்ற கட்சிகள் பயப்படலாம். நாங்கள் பயப்பட மாட்டோம் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
எனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியலுக்குள் வராது. ஏனென்றால், கடந்த 2014ஆம் ஆண்டு பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, அந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயவர்தன் போட்டியிட கையெழுத்து போட்டுள்ளார். அதனால், இது வாரிசு அரசியலில் வராது.
ஒரு நடிகை பற்றி அப்படி பேசியிருக்கக் கூடாது. நடிகை திரிஷா எந்த அளவிற்கு மனம் கஷ்டப்பட்டு ட்வீட் போட்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி, நடிகை திரிஷா குறித்து பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications