தமிழக சட்டசபை தேர்தல்.. வேட்புமனு தாக்கல் துவங்கியது.. மார்ச் 22ல் வேட்பாளர் இறுதி பட்டியல்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தற்போது துவங்கி நடந்து வருகிறது.
Recommended Video

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி தேர்வு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு முழுமையாக முடியவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில்வேட்புமனு தாக்கல் இன்று துவங்கி உள்ளது . நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.
வேட்பு மனு கட்டணமாக, ரூபாய் 10000 கட்ட வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி. பிரிவினர் 5,000 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த முறை ஆன்லைன் மூலமும் பணம் செலுத்த முடியும். காலை 11 மணிக்கு இன்று வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ள நிலையில் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.
தினமும் மதியம் 3 வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். கொரோனாவை கருத்தில் கொண்டு குறைவான நேரமே இதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் நபர்கள் இரண்டு பேரை மட்டுமே உடன் அழைத்து வர வேண்டும். அதேபோல் எல்லோரும் மாஸ்க் அணிந்து கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும்.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19ம் தேதி ஆகும். மார்ச் 22ல் வரை வேட்புமனுவை வாபஸ் பெறலாம். மார்ச் 22ல் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்












Click it and Unblock the Notifications