நாளை முதல் 4 நாட்களுக்கு சட்டசபைக் கூட்டம்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை ஆய்வுக் குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. நாளை தமிழ்நாடு சட்டசபை கூடவுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக்காக இன்று ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இந்தக் கூட்டத் தொடரில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாளை முதல் 4 நாட்கள் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது விதி. தமிழ்நாடு சட்டசபையைப் பொறுத்தவரை 2025 ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி வரை பட்ஜெட் விவாதம், துறை ரீதியான மானியக் கோரிக்கை நிகழ்வுகள் சட்டமன்றத்தில் நடைபெற்றன.

ஆய்வு குழு கூட்டம்
அந்த நிகழ்வுகளுக்கு பிறகு சட்டமன்ற கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. சுமார் 6 மாதங்களை எட்டும் நிலையில் அக்டோபர் 14 ஆம் தேதி (நாளை) சட்டமன்றம் கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இதனையொட்டி அப்பாவு தலைமையில் பேரவை அலுவல் சார்ந்த ஆய்வுக்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில் சட்டசபை கூட்டத் தொடர் பற்றிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. எத்தனை நாட்களுக்கு கூட்டத்தை நடத்துவது, கூட்டத்தை எப்படி திட்டமிடுவது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி நாளை தொடங்கும் சட்டசபை கூட்டம் அடுத்த 4 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான அறிவிப்பை ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு அப்பாவு வெளியிட்டுள்ளார்.
சட்டசபை நிகழ்வு
நாளை முதல் நாள் கூட்டத்தில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 மக்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து அஞ்சலி செலுத்துவது, மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 8 பேர், வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் தெரிவிப்பது போன்றவை திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாள் கூட்டத்திற்கு பிறகு தான் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் சட்டமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
நாளை சட்டசபை கூடுகிறது
கூட்டத்திற்குப் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: அக்டோபர் 14 ஆம் தேதி சட்டசபை கூடுகிறது. 4 நாள்கள் சட்ட சபை கூட்டத் தொடர் நடைபெறும். நாளை மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். கரூர் துயரம் தொடர்பாகவும் நாளை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
அக்டோபர் 15 ஆம் தேதி கூடுதல் மானியக் கோரிக்கை முன்வைக்கப்படும். அக்டோப் 17 ஆம் தேதி வரை மானியக் கோரிக்கைகளை மீதான விவாதம் நடைபெறும் என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications