இன்ஸ்டா ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு இப்படியா மாட்டுறது? மதுரை பேராசிரியைக்கு புதுவையில் கிடைத்த பாடம்
சென்னை: புதுவை பாண்டி மெரினா கடற்கரையில் விபரீதத்தை உணராமல் பேராசிரியை ஒருவர் அங்குள்ள பாறைகளின் மீது ஏறி ரீல்ஸ் எடுக்க முயன்று கால் சறுக்கி கீழே விழுந்த சம்பவம் நடந்துள்ளது. மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டிய பேராசிரியை ஒருவரே ரீல்ஸ் மோகத்தில் கடலில் பாறையில் சிக்கிய நிகழ்வு புதுவையில் நடைபெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பது தற்போது மக்களிடையே மிகப்பெரிய பொழுதுபோக்காக மாறியுள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், ஸ்மார்ட்போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இந்த இன்ஸ்டாகிராம் உள்ளது. இதில் ரீல்ஸ்களை பதிவிட்டு அதிக வியூஸ் மற்றும் லைக்ஸ் பெறவும் பலரும் ரொம்பவே மெனக்கெடுகிறார்கள்.

இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்
படித்தவர், படிக்காதவர் என பாகுபாடு இல்லாமல் அனைவரையும் இப்படி இன்ஸ்டாகிராம் ஆட்டிப்படைத்துவிடுவதை பார்க்க முடிகிறது. இன்ஸ்டாவில் பலரும் நல்ல முறையில் பயனுள்ள தகவல்களை பகிர்ந்தாலும், அதிக லைக்ஸ்களுக்காக வரம்பு மீறிய செயல்களிலும் ஆபத்தான செயல்களிலும் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது.
சில நேரங்களில் கத்தி, அரிவாளுடன் கூட சில இளைஞர்கள் வீடியோ போட்டு காவல்துறையிடம் சிக்கிக்கொள்கிறார்கள். அதேபோல, ஆபத்தான முறையில் பைக் ஓட்டுவது, வீலிங் செய்வது என சாலையில் தனது உயிரை பணயம் வைப்பதோடு மற்றவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போல நடந்து கொள்கிறார்கள்.
புதுவையில் பேராசிரியைக்கு நேர்ந்த சோகம்
என்னதான் போலீசாரும் சமூக ஆர்வலரும் அறிவுரைகள் கூறினாலும் இந்த செயல்களை கட்டுப்படுத்த முடிவது இல்லை. சரி, இங்கே விஷயத்திற்கு வருவோம். மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டிய பேராசிரியையே ரீல்ஸ் மோகத்தில் கடலில் பாறையில் சிக்கிய நிகழ்வு புதுவையில் நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பாறைகள் மீது ஏறி ரீல்ஸ்
மதுரையை சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 26). இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் புதுவைக்கு சுற்றுலா வந்தார். புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் நேற்று மாலை 5 மணியளவில் பாண்டி மெரினா கடற்கரைக்கு சென்றனர்.
ஆனால் விபரீதத்தை உணராமல் அங்குள்ள பாறைகளின் மீது ஏறி வைஷ்ணவி செல்போனில் ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென கால் சறுக்கி வைஷ்ணவி விழுந்தார். விழுந்த வேகத்தில் பாறைகளின் இடுக்கில் சிக்கிக் கொண்டார்.
எவ்வளவு முயன்றும் மீட்க முடியவில்லை
இதைக் கவனித்த வைஷ்ணவியின் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை கை கொடுத்து தூக்க முயற்சித்துள்ளனர். ஆனால் வைஷ்ணவியின் கால் மற்றும் இடுப்பு பகுதி பாறையின் நடுவில் சிக்கிக் கொண்டது. இதனால் எவ்வளவு முயன்றும் மீட்க முடியவில்லை.
இதையடுத்து, வைஷ்ணவி ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பாறையை கயிறு கட்டி அகற்றி அவரை மீட்க முயன்றனர். ஆனால் பாறை அரை டன்னுக்கு மேல் எடை இருந்ததால் மீட்க முடியவில்லை.
108 ஆம்புலன்ஸ் மூலம்
இதையடுத்து பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த பேரிடர் மீட்பு படையினர் கிரேன் உதவியுடன் பாறையை நகர்த்தி வைஷ்ணவியை மீட்டனர்.
உடனடியாக சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு வைஷ்ணவி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications