கோவை ஏர்போர்ட்டில் பரபரப்பு.. 22 ரக "துருப்பிடித்த" கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட காங்கிரஸ் பிரமுகர்
சென்னை: கோயமுத்தூர் விமான நிலையத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியைப் பிடித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் கே.எஸ்.பி.ஏ.தாங்கல். இவர் பட்டாம்பி நகராட்சி முன்னாள் தலைவராகவும் இருந்தார்.

இன்று காலை தாங்கல், கோயமுத்தூரில் இருந்து பெங்களூர் வழியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய இருந்தார். இன்று காலை 6 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு தாங்கல் வந்தபோது, தாங்கலின் உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்டது.
சோதனையில் தாங்கல் கொண்டு வந்த பையில் துப்பாக்கி ஒன்றும் , ஏழு தோட்டாக்களும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தக் கைத்துப்பாக்கி துருப்பிடித்த நிலையில் பயன்படுத்தமுடியாதபடி இருந்ததாகத் தெரியவந்துள்ளது. தாங்கல் வைத்திருந்த துப்பாக்கி 22 ரக கைத்துப்பாக்கி என தெரியவந்துள்ளது. மேலும் துப்பாக்கியோடு 7 புல்லட்டுகளும் அதோடு இருந்துள்ளது. துப்பாக்கிக்கு உரிய அனுமதி இல்லாத நிலையில் பீளமேடு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயண அவசரத்தில் கைத் துப்பாக்கியைத் தெரியாமல் எடுத்துவந்ததாக தாங்கல் தெரிவித்திருக்கிறார்.

முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில் தாங்கலிடம் பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாங்கல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பட்டாம்பு நகராட்சி முன்னாள் தலைவரான தாங்கல் செயல்பட்டிருக்கிறார். மேலும் இவர் பட்டாம்பியில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், அரசியல் ரீதியாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படுமா என்பது அடுத்தக்கட்ட விசாரணையில்தான் தெரியவரும்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்வர். விமான நிலையத்தில் ஒருவர் காலை வேளையில் கைத்துப்பாக்கியுடன் வந்ததும் விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
-
விஜயை பார்க்க போகும் டெல்லி டீம்.. எப்படியாவது சம்மதிக்க வைப்போம்.. களமிறக்கப்பட்ட மாஸ்டர்மைண்டுகள் -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications