வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்ட ரூ.5000.. நாடு முழுக்க.. பல லட்சம் ஊழியர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்
சென்னை: மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தின் இந்த மாத வரவு நாடு முழுக்க பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
மாதந்தோறும் ₹5,000 வரை வங்கி கணக்கில் செலுத்தப்படும் மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டம் தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களின் ஓய்வூதிய கால பாதுகாப்பை உறுதி செய்யும் இத்திட்டம், மீண்டும் விரிவாக்கப்பட்டு வருகிறது.

அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தில் சேர்வது எப்படி, அதன் விரிவான தகவல்கள் என்ன என்பதை இப்போது காணலாம். இந்தத் திட்டம், வருமான வரி செலுத்தாத 18 முதல் 40 வயதுக்குட்பட்ட சேமிப்புக் கணக்குதாரர்களுக்கானது. இது அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நீண்டகால வாழ்வியல் அபாயங்களைக் குறைத்து, சுயமாக தங்கள் ஓய்வூதியத்திற்காக சேமிக்க ஊக்குவிக்கிறது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஏழைகள், பின்தங்கியோர் மற்றும் அமைப்புசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பாதுகாப்பை வழங்குவதாகும். இத்திட்டத்தில் இணைந்த சந்தாதாரர்கள், 60 வயதை எட்டியதும் பல்வேறு பலன்களைப் பெறலாம்.
அடல் பென்ஷன் யோஜனா (APY) என்றால் என்ன?
சந்தாதாரர்கள் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியமாக மாதம் ₹1,000, ₹2,000, ₹3,000, ₹4,000 அல்லது ₹5,000 வரை பெற முடியும். இந்தத் தொகை, சந்தாதாரர் 60 வயதுக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். சந்தாதாரர் மறைந்த பிறகு, அவரது துணைக்கு அதே ஓய்வூதியத் தொகை வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
சந்தாதாரர் மற்றும் அவரது துணை இருவரும் மறைந்தால், சந்தாதாரர் 60 வயதாகும் வரை திரட்டப்பட்ட மொத்த ஓய்வூதிய நிதி, நாமினிக்கு வழங்கப்படும். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கான பங்களிப்புகள், தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) போன்றே, வருமான வரிச் சட்டம் 80CCD(1)-ன் கீழ் வரிச் சலுகைகளைப் பெற தகுதியுடையது.
அடல் பென்ஷன் யோஜனா (APY) - பென்சன் எவ்வளவு கிடைக்கும்?
சந்தாதாரர் 60 வயதுக்கு முன்பே காலமானால், அவரது துணை அடல் பென்ஷன் யோஜனா கணக்கில் தொடர்ந்து பங்களிக்க விரும்பினால், அவ்வாறு செய்யலாம். இந்த கணக்கு மீதமுள்ள காலத்திற்கு துணையின் பெயரில் பராமரிக்கப்படும். சந்தாதாரர் 60 வயது அடைந்திருந்தால், அவரது மறைவுக்குப் பிறகு துணைக்கு அதே ஓய்வூதியத் தொகை வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். மாற்றாக, திட்டத்தை நிறுத்திவிட்டு, துணை திட்டப் பலன்களைப் பெறவும் முடியும்.
அடல் பென்ஷன் யோஜனா திட்ட சந்தாதாரர்கள், தாமதமான அல்லது செலுத்தப்படாத பங்களிப்புகளுக்கு கட்டணங்கள் மற்றும் வட்டி செலுத்த நேரிடும். இந்த கட்டணங்கள் மற்றும் அதன் பயன்பாட்டு விதிமுறைகள், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, PFRDA ஆல் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும்.
அடல் பென்ஷன் யோஜனா புகார் அளிக்கும் முறை
அடல் பென்ஷன் யோஜனா தொடர்பாகப் புகார் தெரிவிக்க விரும்புவோர், www.npscra.nsdl.co.in என்ற இணையதளத்தை எந்த நேரத்திலும், எங்கு இருந்தும் இலவசமாக அணுகலாம். இணையதள முகப்புப் பக்கத்தில், 'NPS-Lite அல்லது CGMS சந்தாதாரர்' என்பதைத் தேர்ந்தெடுத்து, புகாரைப் பதிவு செய்ய வேண்டும். புகார் பதிவு செய்யப்பட்டதும் ஒரு டோக்கன் எண் வழங்கப்படும். 'ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புகார் / விசாரணையின் நிலையைச் சரிபார்க்கவும்' என்ற விருப்பத்தின் கீழ், சந்தாதாரர் தனது புகாரின் தற்போதைய நிலையை அறிய முடியும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications