தீபாவளி வந்தாச்சு.. செலவுக்கு பணம் எடுக்க ஏடிஎம் போனா பணம் இல்லை..மக்கள் அல்லல்
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இது மட்டுமல்லாமல் ஊர்களுக்கு செல்லவும் பேருந்து, ரயில்களில் கூட்டம் கண்ணை கட்டுகிறது. சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவுக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது.

ஏடிஎம் மையம்
இந்நிலையில் தீபாவளி செலவுக்காக காசு எடுக்க ஏடிஎம் மையங்களுக்கு ஏராளமானோர் செல்கின்றனர். ஆனால் சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் இல்லை.

மக்கள் அவதி
இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். இங்கு மட்டுமில்லை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் இல்லாததால் ஊருக்கு செல்லும் மக்கள் அவதியுறுகின்றனர்.

வழியில்லை
இதுகுறித்து வங்கி வாடிக்கையாளர்கள் கூறுகையில், துணி மணிகளை கூட கார்டை ஸ்வைப் செய்து வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஊருக்கு செல்ல பேருந்து கட்டணத்துக்கு என்ன செய்வது. கறி கடைகளிலும் பணம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லையே என கூறுகின்றனர்.

பணம் எடுத்தால்...
இன்னும் சிலரிடம் கேட்டபோது இதுபோல் பிரச்சினை வரும் என தெரிந்ததால் நாங்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னரே பணத்தை எடுத்து வைத்துவிட்டோம் என்கின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications