சென்னை கே.கே.நகர் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி.. கல்லை வைத்து உடைக்க முயன்ற கொள்ளையர்கள்!
சென்னை: சென்னை கலைஞர் கருணாநிதி நகர் (கே.கே.நகர்) ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேகே நகர் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் கல்லால் உடைக்க முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டின் சில இடங்களில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. திருவண்ணாமலையில் ஏடிஎம் மையத்தில் இருந்து ரூ73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. அதில் ஈடுபட்ட மிகப் பெரிய நெட் ஒர்க்கை கண்டுபிடித்து போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வாணியம்பாடி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபடவும் ஒரு கும்பல் முயற்சித்தது. இதே பாணியில் சென்னை கேகே நகரில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தின் மீது கல்லைப் போட்டு அதனை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அப்பகுதி சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications