ATM Rule: ஏடிஎம் விதிகளில் முக்கிய மாற்றம்.. ஏப்.1 முதல்! இந்த விஷயங்களை தெரியாமல் பணம் எடுக்காதீங்க
சென்னை: வரும் ஏப்ரல் 1 புதிய நிதியாண்டு முதல் நிதி சார்ந்த விஷயங்களில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கின்றன. அந்த வகையில் ஏடிஎம் விதிகளில் முக்கிய மாற்றங்களை எஸ்.பி.ஐ மற்றும் ஹெச்.டி.எப்.சி உள்ளிட்ட வங்கிகள் கொண்டு வர இருக்கின்றன. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
நகர்ப் புறங்களில் ஏடிஎம் பயன்பாடு குறைந்து யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. எனினும், கிராமப்புறங்களில் ஏடிஎம்களின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. மக்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏடிஎம்களையே பெரிதும் சார்ந்து இருக்கிறார்கள். வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏடிஎம் விதிகளில் வங்கிகள் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

5 முறை மட்டுமே இலவசம்
ஏடிஎம் இயந்திரங்களில் டெபிட் கார்டு பயன்படுத்தாமல் யுபிஐ பயன்படுத்தி பணம் எடுக்கும் முறையும் இனி மாதாந்திர கட்டண முறையில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கணக்கு வைத்து இருக்கும் வங்கி ஏடிம்களில் மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள், பிற வங்கி ஏடிஎம்கள் என்றால் மெட்ரோ நகரங்களில் 3 பரிவர்த்தனைகளும் சிறு நகரங்கள் என்றால் 5 பரிவர்த்தனைகளும் இலவசமாக செய்து கொள்ள முடியும்.
அதன்பிறகு மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எப்.சி தெரிவித்துள்ளது. தற்போது வரை ஹெச்.டி.எப்.சி கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ வழியாக ஏடிஎம்களில் பணம் எடுப்பதை தனி கேட்டகரியில் வங்கி நிர்வாகம் வைத்து இருந்தது. வரும் புதிய நிதியாண்டு முதல் இந்த கட்டண வரம்புக்குள் யுபிஐ அடிப்படையிலான ஏடிஎம் பரிவர்த்தனையும் கொண்டு வரப்பட உள்ளது.
எதெற்கெல்லாம் கட்டணம்?
வரும் ஏப். 1 முதல் இலவச பரிவர்த்தனைகளுக்கு பிறகு பேலன்ஸ் பார்ப்பது, மினி ஸ்டேட்மண்ட் எடுப்பது ஆகியவற்றிற்கு ஒவ்வொரு முறையும் ரூ.8.50 முதல் 12 ரூபாய் வரை கட்ணம் வசூலிக்கபடும். இலவச பரிவர்த்தனைகள் முடிந்த பிறகு பேலன்ஸ் இல்லாமல் ரத்து ஆகும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 முதல் 25 வரை வங்கிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன.
பாரத ஸ்டேட் வங்கிகளில் 10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் ஓடிபியை பதிவிடுவது செய்வது அவசியம். யுபிஐ அடிப்படையிலான மாதாந்திர பண பரிவர்த்தனை ஐந்து முறை இலவசம் ஆகும். அதன்பிறகு கட்டணம் வசூலிக்கப்படும். பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் டெபிட் கார்டு வகையை பொறுத்து ஒரு நாளைக்கு ரூ.75 ஆயிரம் வரை எடுக்கலாம்.
வங்கி கணக்குகளின் டெபிட் கார்டு வகைகளை பொறுத்து கட்டணங்கள் விதிகள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை ரூ.1 லட்சம் வரையில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் வாயிலாக பணம் எடுக்க முடியும். வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!
இதுபோக ஜியோ பேமண்ட்ஸ் வங்கியும் கியூஆர் கோடு அடிப்படையில் பணம் எடுக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள், யுபிஐ கியூஆர் கோடை ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியும். வங்கி பரிவர்த்தனைகள் பெரும்பாலும் தற்போது டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டன. வங்கி பக்கமே போகாமல் பண பரிவர்த்தனையை செய்யும் அளவுக்கு வசதிகள் பெருகிவிட்டன.
சிடிஎம் மெஷின் மூலமாக அக்கவுண்டில் பணம் செலுத்துவது, ஏடிஎம் வாயிலாகவே பணத்தை எடுக்கும் முடியும். இந்த பழக்கம் கூட மக்களிடையே குறைய தொடங்கிவிட்டது. யுபிஐ, இணைய வழி பரிவர்த்தனை வழியாகவே பெரும்பாலும் நடைபெறுகிறது. இருந்தாலும் கிராமப்புறங்களில் ஏடிஎம் அடிப்படையிலான பரிவர்த்தனை அதிகமாக இருப்பதால் வங்கிகள் கொண்டு வந்து இருக்கும் இந்த மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications