கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலவர கும்பல் தாக்குதல்.. பொங்கி எழுந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: "பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும். நாட்டு மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்" என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள், இயேசு பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வட இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் சில கும்பல் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை தாக்கியும் சேதப்படுத்தியும் சில கும்பலைச் சேர்ந்தவர்கள் அட்டூழியம் செய்துள்ளனர். வட இந்தியாவில் மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் அசாம் மாநிலங்களில் இத்தகைய வன்முறை சம்பவங்களில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
சத்தீஸ்கரின் ராய்பூர் உள்ள மால் ஒன்றில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களைச் செய்யப்பட்டிருந்த நிலையில், அதை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. ராய்ப்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உருட்டுக் கட்டைகளுடன் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பல், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்காரங்களைச் சேதப்படுத்தி உள்ளது.
தனியார் பள்ளிகள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு விடுமுறை விடவும் கூட சில இடங்களில் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளன. இத்தகைய வன்முறை சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது! பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.
மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளி விவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டு மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!" எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications