சென்னையில் சூரியன் சுடும் கவனம்..தென் மாவட்டங்களில் ஜில் மழை..வானிலையின் கூல் அறிவிப்பு
சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் மார்ச் 4ஆம் தேதியும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf
தமிழ்நாட்டில் கோடை காலம் முன் கூட்டியே ஆரம்பித்து விட்டது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 35.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை, கோவை, தருமபுரி, கரூர், திண்டுக்கல், மதுரை, கடலூர், சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர், நாமக்கல் மாவட்டங்கள், மற்றும் காரைக்காலில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்துள்ளது. ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் இன்றும், மார்ச் 4ஆம் தேதியும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மார்ச் 2,3,5ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும்.
மார்ச் 4, 5ஆம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications